Home /News /sports /

IPL 2022- மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை- ஒரே போடாகப் போட்ட பத்திரிகையாளர்

IPL 2022- மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை- ஒரே போடாகப் போட்ட பத்திரிகையாளர்

ஐபிஎல் கோப்பையுடன் ரோஹித் சர்மா

ஐபிஎல் கோப்பையுடன் ரோஹித் சர்மா

இந்திய வீரர் ஷெல்டன் ஜாக்சனை வெளிநாட்டு வீரர் என்று திரும்பத் திரும்ப ஒரு பத்திரிகையாளர் கூறி வாங்கிக் கட்டிக் கொண்டார் என்றால், விக்ராந்த் குப்தா என்ற பெயர் பெற்ற ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையே வென்றதில்லை என்று ஒரேபோடு போட்டு இப்போது நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

மேலும் படிக்கவும் ...

    தொலைக்காட்சி விவாதங்களில் நாக்குத் தவறுதல் நடைபெறும், அதைப் பெரிது படுத்தக் கூடாது, ஆனால் நெட்டிசன்கள் இருக்கிறார்களே, அவர்கள் தாங்கள் வாழ்க்கையில் எந்தத் தவறுமையுமே செய்யாதது போல் இப்படித் தவறு செய்பவர்களை பிடித்துக் கிழிப்பது என்பதை பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர் என்று ஒருசில சமூக ஆர்வலர்கள் கூறுவதும் பரிசீலிக்கத்தக்கதே.

    இந்திய டி20 லீக்கில் சிறப்பாகச் செயல்படும் அணிகளைப் பற்றிய உரையாடலின் நடுவில், 2008ல் போட்டி தொடங்கியதில் இருந்து இதுவரை ஒரு பட்டத்தைக்கூட வென்றிராத அந்த அணிகளைப் பற்றி குப்தா பேச விரும்பினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவைக் குறிப்பிட்டார். டெல்லி கேபிடல்ஸ் என்ற பெயரோடு ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் - கோப்பையை வென்றதில்லை என்று ஒரே போடாக போட்டார்.

    மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் விளையாட்டின் ரசிகர்கள், பொதுவாக, விவாதத்திற்கு வருவதற்கான தயாரிப்பு இல்லாததால் திகைத்து, முற்றிலும் கருணையிலாமல் பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தாவை கிழித்து எடுத்து விட்டனர்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நாளை, மார்ச் 26, சனிக்கிழமை முதல் ஐபிஎல் போட்டி தொடங்குகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Rohit sharma

    அடுத்த செய்தி