Home /News /sports /

IPL Auction 2022: ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல்நாளில் வாங்கிய வீரர்கள் யார்யார்? செலவிட்ட தொகை எவ்வளவு?

IPL Auction 2022: ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல்நாளில் வாங்கிய வீரர்கள் யார்யார்? செலவிட்ட தொகை எவ்வளவு?

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

Mumbai Indians Auction 2022: மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷன் –  ரூ.15.25 கோடி, டெவால்ட் ப்ரீவிஸ் - ரூ.3 கோடி, பசில் தம்பி – ரூ. 30 லட்சம், முருகன் அஸ்வின் - ரூ.1.6 கோடி என ரூ.21.15 கோடியை செலவிட்டுள்ளது. மீதமுள்ள ரூ.27.85 கோடியுடன் இரண்டாம் நாள் ஏலத்தில் அந்த அணி இன்று பங்கேற்கிறது. 

மேலும் படிக்கவும் ...
    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்தில் மிகவும் விலையுயர்ந்த வீரர்களில் ஒருவராக எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷானை மும்பை இந்தியன்ஸ் ரூ 15.25 கோடிக்கு வாங்கியது. டெவால்ட் ப்ரீவிஸ், பசில் தம்பி, முருகன் அஸ்வின் ஆகியோரையும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் 15-வது தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில்  நேற்று தொடங்கியது. இன்றும் ஏலம் நடைபெறுகிறது.  2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் பங்கேற்க 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,214 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் இருந்து 590 வீரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதிப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

    அதன்படி, நேற்று நடைபெற்ற முதல்நாள் ஏலத்தில்  இஷான் கிஷானை மும்பை இந்தியன்ஸ்  வாங்கியது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷோனை வாங்குவதற்காகவே தொடக்கத்தில் பல வீரர்கள் ஏலத்தில் எடுக்கவில்லை.  பின்னர், இஷான் கிஷோனை ஏலம் விடப்பட்டபோது, அவரை ரூ 15.25 கோடிக்கு அந்த அணி வாங்கியது.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது இந்திய வீரர் என்னும் பெருமையை இஷான் கிஷோன் பெற்றுள்ளார்.ஐபிஎல் 2008ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் (டிசி) அணியால் 16 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர் ஆவார்.

    இதையும் படிங்க: IPL Auction 2022 Ishan Kishan: ஐபிஎல் ஏல வரலாற்றில் 2-வது ‘காஸ்ட்லி’ வீரர் இஷான் கிஷன்


    மும்பை இந்தியஸ் அணியிடம் மொத்தம் உள்ள 90 கோடியில்  ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ 8 கோடி), கெய்ரன் பொல்லார்ட் (ரூ. 6 கோடி) என ரூ.42 கோடியை வீரர்களை தக்க வைப்பதற்காக அந்த அணி செலவிட்டது. அவர்கள் அதிகபட்சமாக 25 வீரர்கள் கொண்ட அணியை உருவாக்க வேண்டும். இதில் நான்கு வீரர்களை ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள நிலையில், தற்போது 21 ஓபன் ஸ்லாட்டுகள் உள்ளன, அதில் ஏழு பேர் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களாக இருக்கலாம்.

    மேலும் படிக்க: தமிழ் பெண்ணை மணக்கும் மேக்ஸ்வெல்.. இணையத்தில் வைரலாகும் மஞ்சள் நிற பத்திரிக்கை!


    மீதமுள்ள ரூ.48 கோடியுடன் முதல் நாள் ஏலத்தில் பங்கேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷன் –  ரூ.15.25 கோடி, டெவால்ட் ப்ரீவிஸ் - ரூ.3 கோடி, பசில் தம்பி – ரூ. 30 லட்சம், முருகன் அஸ்வின் - ரூ.1.6 கோடி என ரூ.21.15 கோடியை செலவிட்டுள்ளது. மீதமுள்ள ரூ.27.85 கோடியுடன் இரண்டாம் நாள் ஏலத்தில் அந்த அணி பங்கேற்கிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: IPL 2022, IPL Auction, Mumbai Indians

    அடுத்த செய்தி