• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இடம்பிடித்த டெண்டுல்கர்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இடம்பிடித்த டெண்டுல்கர்!

அர்ஜூன் டெண்டுல்கர்

அர்ஜூன் டெண்டுல்கர்

கடந்த மாதம் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அர்ஜூன் அறிமுக வீரராக களம் இறங்கினார்.

  • Share this:
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. 21 வயது ஆகும் அர்ஜூன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்த போதே அது தலைப்புச் செய்தியானது. சச்சினின் சாயல் கொண்ட அர்ஜூனின் ஆட்டத்தில் அவரது தந்தையின் சாயல் இருக்குமா என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்பாக அமைந்தது.

இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பட்டியலிடப்பட்ட அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அவரின் அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இது எதிர்பார்த்த ஒன்றாகவே அமைந்தது.

அர்ஜூன் டெண்டுல்கர்


ஏனெனில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து அர்ஜூன் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது.

கடந்த மாதம் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அர்ஜூன் அறிமுக வீரராக களம் இறங்கினார். இவர் இடது கை பேட்ஸ்மேனாகவும், மித வேகப்பந்து வீச்சாளராகவும் அர்ஜூன் திகழ்கிறார். அறிமுக போட்டியிலேயே 3 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் அர்ஜூன். இந்த போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதே போல தனது 2வது போட்டியில் பாண்டிச்சேரியுடன் விளையாடிய அர்ஜூன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் பிரவேசம் கண்டு தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் போது சச்சினின் சாயல் அவரது ஆட்டத்தில் தென்படுமா என்பதை காண சச்சினின் ரசிகர்கள் ஆவலாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இப்போதே கருத்துகள் பரிமாறப்படுகின்றன.

இந்நிலையில் அர்ஜூன் டெண்டுல்கர் தவிர்த்து ஆடம் மில்னே (ரூ.3.20 கோடி), நாதன் கோல்டர் நைல் (ரூ.5 கோடி), பியூஸ் சாவ்லா (ரூ.2.40 கோடி), ஜேம்ஸ் நீஷம் (ரூ.50 லட்சம்), யுத்விர் சாரக், மார்கோ ஜேன்சன் ஆகியோரை 20 லட்ச ரூபாய்க்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய ஏலத்தில் எடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: