விளையாட்டு

  • associate partner

சாதனை மேல் சாதனை.. ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் அசத்திய மும்பை இண்டியன்ஸ் வரலாறு..

தோனி 12 சீசன்கள் கேப்டனாக இருந்து 3 முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளார். ரோஹித் சர்மா 9 முறை கேப்டனாக இருந்து அதில் 5 முறை அணிக்கு கோப்பையை வென்று தந்துள்ளார்.

சாதனை மேல் சாதனை.. ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் அசத்திய மும்பை இண்டியன்ஸ் வரலாறு..
மும்பை இண்டியன்ஸ்
  • News18 Tamil
  • Last Updated: November 11, 2020, 11:56 AM IST
  • Share this:
ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை இண்டியன்ஸ் அணி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. 

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த சமயங்களில் மும்பை இண்டியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தவித்தது. 2008ம் ஆண்டு 5வது இடம், 2009ம் ஆண்டு 7வது இடம் என தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்தது. 2010 ம் ஆண்டு சச்சினின் அபார ஆட்டத்தால் இறுதிப் போட்டிவரை வந்து சென்னையிடம் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது. அடுத்து 2011, 12ம் ஆண்டுகளில் 3வது இடத்தை பிடித்து கோப்பையை நெருங்கிக் கொண்டிருந்தது.

பின்னர் 2013-ஆம் ஆண்டு அணியில் இணைந்த ரோஹித் ஷர்மாவின் சிறப்பான கேப்டன்ஷிப்பால் சென்னையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார்.


இதன் பிறகு மும்பை அணிக்கு ஏறுமுகமாகவே அமைந்தது. 2014ல் நான்காவது இடம் பிடித்தாலும் 2015ல் மீண்டெழுந்து சென்னையை வீழ்த்தி மீண்டும் கோப்பையை தட்டிப்பறித்தார் ரோஹித் ஷர்மா.

இதனை தொடர்ந்து மும்பை இண்டியன்ஸ் அணி வீழ்த்த முடியாத அணியாக உருவெடுத்தது. 2017, 2019 என ஒருவருட இடைவெளியில் அடுத்தடுத்து கோப்பையை வென்று தந்த ரோஹித் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற வரலாற்றுச்சாதனை நிகழ்த்தி காட்டினார். அத்துடன் 4  முறை கோப்பையை கைப்பற்றிய கேப்டன் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார்.

4 முறை கோப்பையை வென்றிருந்தாலும் தொடர்ந்து 2 முறை மும்பை அணியால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றமுடியவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. நடப்பு தொடரில் கோப்பையை தக்கவைத்தன் மூலம் 2019, 20 என தொடர்ந்து 2 முறை கோப்பையை ருசித்து சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளது மும்பை இண்டியன்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் லீப் வருடங்களில் புதிய அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என கூறியவர்களுக்கு மும்பை அணி பதிலடி கொடுத்திருக்கிறது. 2008 ராஜஸ்தான், 2012 கொல்கத்தா, 2016 ஹைதராபாத் என லீப் வருடங்களில் புதிய அணி மகுடம் சூடிய நிலையில் 2020ம் ஆண்டு இந்த கூற்றை பொய்யாக்கி 5வது முறையாக மகுடம் சூடி அசத்தியிருக்கிறது மும்பை அணி.



ஐ.பி.எல். தொடரை பொறுத்தவரை தலைசிறந்த கேப்டன் என்றால் அது தோனி என்றுதான் கிரிக்கெட் ரசிகர்கள் கூறுவர். உண்மையில் தோனி 12 சீசன்கள் கேப்டனாக இருந்து 3 முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளார். ஆனால் ரோஹித் சர்மா 9 முறை கேப்டனாக இருந்து அதில் 5 முறை அணிக்கு கோப்பையை வென்று தந்துள்ளார்.
First published: November 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading