விளையாட்டு

  • associate partner

அபுதாபி, ஷார்ஜா, துபாய் கிரிக்கெட் மைதானங்களின் வரலாறு, பிட்ச் ரிப்போர்ட் என்ன?

IPL 2020 | ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, ஷார்ஜா, துபாய் மைதானங்கள் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அபுதாபி, ஷார்ஜா, துபாய் கிரிக்கெட் மைதானங்களின் வரலாறு, பிட்ச் ரிப்போர்ட் என்ன?
அபுதாபி கிரிக்கெட் மைதானம்
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 3:37 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போன்ற அதிவேக கிரிக்கெட் போட்டிகளில் அணியின் வெற்றியை, திறமையான பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களை தாண்டி ஆடுகளங்களின் தன்மையும் தீர்மானிக்கிறது. துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயித் மைதானங்களில் மட்டும் அனைத்து போட்டிகளிலும் நடைபெறவுள்ளன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் 2009-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மைதானம் 25 ஆயிரம் இருக்கைகளை கொண்டது. நடப்பு தொடரில் இங்கு மட்டும் 24 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 4 போட்டிகள் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகின்றன.

துபாய் மைதானத்தை பொருத்தவரை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. டி-20 கிரிக்கெட்டில் இந்த மைதானத்தில் 211 ரன்கள் எடுக்கப்பட்டதே, ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இங்கு,அதிகபட்சமாக 183 ரன்கள் வரை சேஸிங் செய்யப்பட்டுள்ளது.


அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம் கடந்த 2004-ம் ஆண்டு கட்டப்பட்டது. 20 ஆயிரம் ரசிகர்கள் வரை அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஐபிஎல் தொடரில் 20 ஆட்டங்கள் இங்கு நடைபெற உள்ளன. இதுவரை 44 டி-20 போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்துள்ளன. அதில் 19 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 25 போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன.

ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானம் 1982-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 16 ஆயிரம் ரசிகர்கள் வரை அமர்ந்து பார்க்ககூடிய இந்த மைதானம் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்ததாகும். நடப்பு ஐ.பி.எல் தொடரில் இங்கு 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.இந்த மைதானத்தில் ஓர் அணியால் அதிகபட்சமாக 215 ரன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷார்ஜா மைதானமும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாகும். இங்கு நடைபெற்ற 14 ஆட்டங்களில் 9 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. 4 ஆட்டங்களில் மட்டுமே இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றிபெற்றுள்ளது. 
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading