விளையாட்டு

  • associate partner

MIvsDC | மும்பை இந்தியன்ஸ் வெறித்தனம்... டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

MIvsDC | மும்பை இந்தியன்ஸ் வெறித்தனம்... டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
MIvsDC
  • Share this:
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி முதல் அணியாக ஐ.பி.எல் 2020 இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரின் ப்ளே ஆஃப் குவாலிஃபையர் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டள்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டீ-காக் களமிறங்கினார்கள். ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் சர்மா விக்கெட் ஆரம்பத்திலேயே விழுந்தாலும் மும்பை சுதாரித்து கொண்டு விளையாடியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் பொறுப்புடன் விளையாடினார்.


டீ-காக் 40 ரன்னிலும் சூர்யகுமார் யாதவ் 51 ரன்னிலும் அவுட்டாகினர். சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் மும்பை தனது ரன்ரேட்டை தக்கவைத்து கொண்டே இருந்தது. இஷான் கிஷான் 30 பந்துகளில் 55 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இறுதி ஓவர்களில் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தவான், ப்ர்த்திவி ஷா, ரஹானே அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பிடியில் சிக்கிய டெல்லி அணி சின்னாபின்னமானது. அந்த அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பும்ரா 4 ஒவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து டெல்லி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து ஐ.பி.எல் 2020 தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறி உள்ளது.நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதரபாத் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் மோதும். அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 10-ம் நடைபெற உள்ள இறுதிபோட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளும்.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: November 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading