சிஎஸ்கே கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவின் காலம் அல்பாயுசில் முடிந்து போன நிலையில் மீண்டும் தோனி கைக்கே கேப்டன்சி வந்தது. இது குறித்து பல ஊகங்கள் நிலவி வரும் நிலையில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசனும், சிஎஸ்கே நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளனர்.
சிஎஸ்கே தன் அறிக்கையில் கூறியதாவது:
ரவீந்திர ஜடேஜா தன் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கேப்டன்சியைத் துறக்க முடிவு செய்தார். அதனால் தோனியை கேப்டன்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அணியின் பெரும் நலம் கருதி தோனியும் சரி என்று ஜடேஜாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். என்று சிஎஸ்கே அறிக்கை தெரிவித்தது.
அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் கூறும்போது, “நான் கேப்டனின் முடிவை ஆதரிக்கிறேன்” என்றார்.
முன்னதாக தோனியும் ஜடேஜாவின் முடிவு பற்றிக் கூறும்போது,
ஜடேஜாவுக்கு தயாரித்துக் கொள்வதற்கு போதிய கால அவகாசம் இருந்தது. அவர்தான் அணியை வழிநடத்த வேண்டும் என்று விரும்பப்பட்டது. இந்த மாற்றம் வேண்டும் என்று நான் விரும்பினேன். கடைசியில் சீசன் முடிந்தவுடன் வேறு ஒருவர் கேப்டன்சி செய்ய தான் டாஸுக்கு மட்டுமே சென்றோம் என்று அவர் கருதி விடக்கூடாது.
எனவே இது மெதுவான ஒரு மாற்றமாக இருக்க வேண்டும். ஸ்பூன் ஃபீடிங் எந்த ஒரு கேப்டனுக்கும் உதவாது. களத்தில் முக்கியமான முடிவுகளை கேப்டன் தான் எடுக்க வேண்டும். அந்த முடிவுகளுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் கேப்டனாகி விட்டால், நிறைய விஷயங்களுடன் உங்கள் ஆட்டம் பற்றியும் நாங்கள் அக்கறை காட்ட வேண்டும். ” என்றார் தோனி
ஜடேஜா இந்த ஐபிஎல் சீசனில் 112 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று சிஎஸ்கே கேப்டனாக பொறுப்பேற்ற தோனி மீண்டும் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, IPL 2022, MS Dhoni, Ravindra jadeja