அந்த மனசு தான் சார் கடவுள்... தோனியின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

எம்எஸ் தோனி

சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்தில் சக ஊழியருக்கு சல்யூட் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியை 'தல' என்று ரசிகர்கள் அழைப்பது கெத்துக்காக மட்டுமல்ல அவரது பண்பிற்காவும் தான். ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் சிஎஸ்கேவின் கேப்டனாக தொடர்ந்து தோனி செயல்பட்டு வருகிறார்.

  மகேந்திர சிங் தோனி குறித்து வெளியாகும் புகைப்படம், செய்திகளை அவரது ரசிகர்கள் வைரல் செய்வது வழக்கம். அந்த வகையில் சிஎஸ்கே ஆதரவு ஊழியருக்கு மகேந்திர சிங் தோனி சல்யூட் அடிக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

  ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பின் தோனி டிரெஸிங் ரூமுக்கு போகும் அங்கிருந்து சிஎஸ்கே ஆதரவு ஊழியர் சல்யூட் அடித்துள்ளார். தோனியும் பதிலுக்கு அவரை பார்த்து சல்யூட் அடித்தார். இந்த புகைப்படம் கேமிராவில் சிக்கியது.

  மகேந்திர சிங் தோனி மரியாதை நிமித்தமாக அவருக்கு சல்யூட் அடித்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.  ஐபிஎல் 2021 தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்று சிஎஸ்கே புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே அடுத்தப் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
  Published by:Vijay R
  First published: