தோனியின் மிகப் பெரிய ரசிகை அவரது மகள் ஷிவா... வைரலாகும் இந்த வீடியோவே அதற்கு ஆதாரம்

Ziva Dhoni | அந்த வீடியோவில் பென்சிலால் வரையப்பட்ட தோனியின் புகைப்படத்தை கையில் வைத்துள்ளார்.

தோனியின் மிகப் பெரிய ரசிகை அவரது மகள் ஷிவா... வைரலாகும் இந்த வீடியோவே அதற்கு ஆதாரம்
ஷவா தோனி
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 4:09 PM IST
  • Share this:
தோனியின் மகள் ஷிவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல் தொடர் வரும் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது. அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டதால், அவரது அதிரடியான ஆட்டத்தை ஐ.பி.எல் தொடரில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். மகேந்திர சிங் தோனியும் ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு வலைபயிற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார்.


இந்நிலையில் தனது தந்தை தோனியை மிகவும் மிஸ் செய்வதாக ஷிவா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அவர் அண்மையில், அப்பாவின் மிகப்பெரிய ரசிகை என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
View this post on Instagram
 

Papa s biggest fan !


A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on


அந்த வீடியோவில் பென்சிலால் வரையப்பட்ட தோனியின் புகைப்படத்தை கையில் வைத்துள்ளார். ஷிவாவிடம் சாக்ஷி இது யார் என்று கேட்க எனது தந்தை என்கிறார். உறுதியாகவா என்று மீண்டும் கேட்க, ஆம் மகேந்திர சிங் தோனி என்று ஷிவா க்யூட்டாக பதில் சொல்கிறார்.இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஊரடங்கின் போது தனது மகளுடன் தோனி நீண்ட நேரத்தை கழித்தார். தற்போது ஐ.பி.எல் தொடருக்காக அவர் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளதால் அவரை மிகவும் மிஸ் செய்துள்ளார் ஷவா.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading