• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ‘கேரக்டர்’ இல்லாமல் இப்படி மீண்டு வந்திருக்க முடியாது: கடந்த ஐபிஎல் தொடர் தோல்வியின் வேதனை குறித்து தோனி

‘கேரக்டர்’ இல்லாமல் இப்படி மீண்டு வந்திருக்க முடியாது: கடந்த ஐபிஎல் தொடர் தோல்வியின் வேதனை குறித்து தோனி

தோனி.

தோனி.

கடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமை சிஎஸ்கே அணி லீக் ஸ்டேஜிலேயே வெளியேற்றப்பட்டது. இந்த முறை அதற்கு பழி தீர்க்கும் விதமாக பைனலில் முதலில் நுழைந்த அணியாக வலுவடைந்துள்ளது.

  • Share this:
    கடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமை சிஎஸ்கே அணி லீக் ஸ்டேஜிலேயே வெளியேற்றப்பட்டது. இந்த முறை அதற்கு பழி தீர்க்கும் விதமாக பைனலில் முதலில் நுழைந்த அணியாக வலுவடைந்துள்ளது.

    இது தொடர்பாக தோனி கூறும்போது, “அது முழு அணி. ஏனெனில் அப்போது கடினமாக இருந்தது. கடந்த முறை முதன் முதலாக பிளே ஆஃப் சுற்றில் ஆடாமல் வெளியேறினோம், எனவே உணர்ச்சிகள் உச்சத்தில் இருந்தன. ஆனால் நாங்கள் கடந்த முறை வெளியேறினாலும் மீதமிருந்த போட்டிகளை வளர்ச்சிக்குப் பயன்படுத்தினோம்.

    தொடரில் நடந்ததை மறப்போம், மீதமிருக்கும் 3-4 போட்டிகளில் சரியாக ஆடுவோம் என்று முடிவெடுத்தோம். அதை எங்கள் அணியின் பேட்டர்கள் சரியாகப் பயன்படுத்தினார்கள் என்றே கூற வேண்டும். அதுதான் நாங்கள் இந்தத் தொடரில் மீண்டும் வலுவாக வந்ததற்குக் காரணம். இதற்கான உரிய பெருமையை உதவிப்பணியாளர்கள் மற்றும் ஒவ்வொரு தனிநபருக்கும் சேர்க்க வேண்டும். அவர்களது ‘கேரக்டர்’ இல்லாமல் இது சாத்தியமல்ல. அவர்கள் கேரக்டர் இல்லாமல் இப்படி மீண்டு வந்திருக்க முடியாது.

    அப்படி அந்தப்போட்டிகளை பெரிதாக பயன்படுத்திய வகையில் ருதுராஜ் கெய்க்வாடின் இன்றைய வளர்ச்சி நம்மை வியக்க வைக்கிறது. அவர் இந்தக் காலக்கட்டத்தில் எப்படி முன்னேறி இருக்கிறார் என்பதை மதிப்பிட வேண்டும் அதற்கு அவரது பார்வை என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது 20 ஓவர் ஆடும் வீரராக அவர் உயர்ந்துள்ளார்.

    தொடக்க வீரராக இருக்கும் பட்சத்தில் நல்ல பார்மில் இருக்கும் போது 10-12 ஓவர்கள் மட்டுமே ஆடக்கூடாது, 18-20 ஓவர்கள் வரை செல்ல வேண்டும். இது எதைக்காட்டுகிறது என்றால் அவர் கற்றுக்கொள்ள பிரயாசைப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. அவர் முறையான கிரிக்கெட் ஷாட்களைத்தான் ஆடுகிறார். அவரிடம் அளப்பரிய திறமை இருக்கிறது.

    இவர் மட்டுமல்ல, பிளெமிங் உட்பட அனைத்து உதவிக்குழுவினரும் இதே மனநிலையில்தான் இருக்கின்றனர், ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்ள இருக்கிறது. 2-3 முறை நான் அவுட் ஆன போது பிளெமிங் என்னிடம் வந்து போ போய் பினிஷ் செய் என்றுதான் சொல்வார், இதுதான் நல்ல வீரரை சாதாரண வீரரிடமிருந்து பிரித்துக் காட்டுவதாகும்.” என்றார் தோனி.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: