• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனியின் அறிவிப்பால் உற்சாகத்தில் சி.எஸ்.கே. ரசிகர்கள்!

தோனியின் அறிவிப்பால் உற்சாகத்தில் சி.எஸ்.கே. ரசிகர்கள்!

டோனி

டோனி

ஓய்வை பொறுத்தவரை நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். சென்னைக்கு மீண்டும் வருவோம். எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான் நடக்கும் என்று தோனி கூறினார்.

  • Share this:
    தனது கடைசி  கிரிக்கெட் ஆட்டம் சென்னையில் தான் நடக்கும் என்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஐ.பி.எல். சீசனிலும் தான் விளையாட உள்ளதை அவர் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வருகிறார்.  சிஎஸ்கே அணியின் மோசமாக நிலை காரணமாக 2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி அப்போது எழுந்தது.

    2020ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது தோனியிடம், இதுதான் சிஎஸ்கே அணிக்கான கடைசி ஆட்டமா என வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தோனி, கண்டிப்பாக இல்லை எனக்கூறினார்

    அதன்படி, இந்த சீசனில் தோனி பங்கேற்று விளையாடி வருவதோது சி.எஸ்.கே. அணியை பிளே ஆப் சுற்றுக்கும் தகுதிப் பெற வைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினாலும் தோனி நல்ல ஃபார்மில் இல்லை என்றும் அடுத்த ஐ.பி.எல். தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் என்றும் பேசப்பட்டது.  இந்த தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என தகவல் வெளியாகியது.

    மேலும் படிக்க: ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய சிஎஸ்கே முக்கிய வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி


    சென்னையில் தான் ஓய்வு

    இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸின் 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வழியாக ரசிகர்களுடன் தோனி கலந்துரையாடினார். அப்போது,  ஓய்வை பொறுத்தவரை நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். சென்னைக்கு மீண்டும் வருவோம். எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான் நடக்கும்.  அப்போது ரசிகர்களையும் சந்திப்பேன்” என்று தோனி குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: பெங்களூருவின் வெற்றி பயணம் தொடருமா? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்!


    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு  பெறும் தேதியை அறிவிக்க ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) விட சிறந்த நாள் இல்லை என்பதால்தான் அன்று அறிவித்ததாகவும் அவர் கூறினார்.

    ஓய்வுக்கு பின்னர் பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, நடிப்பு என்பது எளிதானது அல்ல, ஓய்வுக்கு பின்னரும் கிரிக்கெட் உடன் தொடர்பில் இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: