ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை எடுத்ததால் தோனி ‘ஹேப்பி’ – சி.எஸ்.கே. நிர்வாகி தகவல்

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை எடுத்ததால் தோனி ‘ஹேப்பி’ – சி.எஸ்.கே. நிர்வாகி தகவல்

பென் ஸ்டோக்ஸ் - தோனி

பென் ஸ்டோக்ஸ் - தோனி

பரபரப்பான ஏலத்திற்கு மத்தியில் நேர்த்தியாக செயல்பட்ட சென்னை அணி நிர்வாகம், பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்ததை கேப்டன் தோனி மகிழ்ச்சியாய் உணர்ந்ததாக சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த சில ஆண்டுகளாக நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். கேப்டனாகவும் சில முறை பென் ஸ்டோக்ஸ் செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளதால் இவரை ஏலத்தில் எடுப்பதற்கு ஐபிஎல் அணிகள் எதிர்பார்த்ததைப் போல் போட்டி போட்டன.

பரபரப்பான ஏலத்திற்கு மத்தியில் நேர்த்தியாக செயல்பட்ட சென்னை அணி நிர்வாகம், பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற 145 ரன்கள் இலக்கு…

அந்த வகையில் சென்னை அணி அதிகம் தொகை கொடுத்து வாங்கிய வீரராகவும் பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார். முன்னதாக பவுலர் தீபக் சஹரை ரூ. 14 கோடிக்கு 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி எடுத்திருந்தது. அணியின் கேப்டன் தோனி ரூ. 12 கோடிக்கு அணியில் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார்.

சென்னை அணிக்கு தலைமைப் பொறுப்புடன் கூடிய ஆல்ரவுண்டர் அதிகம் தேவைப்பட்டது. அந்த வகையில் சரியான ஆட்டக்காரரை ஏலத்தில் எடுத்துள்ள சென்னை அணியின் நிர்வாகத்திற்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்..! கவனம் பெறும் சாம் கரனின் காதலி புகைப்படங்கள்

பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறியதாவது-

பென் ஸ்டோக்ஸை நாங்கள் பெற்றதை அதிர்ஷ்டமாக உணர்கிறோம். ஏனென்றால் அவர் சற்று தாமதமாகத்தான் ஏலத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். எங்களுக்கும் ஆல் ரவுண்டர் தேவை இருந்தது. பென் ஸ்டோக்ஸை நாங்கள் ஏலத்தில் எடுத்ததில் தோனிக்கு மிகவும் மகிழ்ச்சி.

தோனிக்கு பின்னர் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்பாரா என்பதை இப்போது சொல்ல முடியாது. அதை தோனிதான் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி, அதனை ஜடேஜாவுக்கு அளித்தார். ஆனால் ரிசல்ட் மோசமாக அமைந்ததால் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனியே ஏற்றுக் கொண்டார்.

First published:

Tags: IPL