• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அஸ்வின் நடத்தையில் கோபமடைந்த தோனி கடுமையாக திட்டினார்- சேவாக் மனம் திறப்பு

அஸ்வின் நடத்தையில் கோபமடைந்த தோனி கடுமையாக திட்டினார்- சேவாக் மனம் திறப்பு

அஸ்வின் நடத்தையில் கடுப்பான தோனி, சேவாக் மனம் திறப்பு

அஸ்வின் நடத்தையில் கடுப்பான தோனி, சேவாக் மனம் திறப்பு

அஸ்வின் நடத்தை ஒருமுறை அநாகரீகத்தின் எல்லையைத் தொட்ட போது அஸ்வினை தோனியும் கடுமையாகச் சாடியுள்ளார், அது எந்த சம்பவம் என்பதை விரேந்திர சேவாக் மனம் திறந்து கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Share this:
    அஸ்வினிடம் இருக்கும் ஒரு பழக்கம் என்னவெனில் வெளியில் புழங்கும் சர்ச்சைகளில் கவனம் செலுத்தி தன்னிலை விளக்கம் அளிப்பது, அல்லது நியாயப்படுத்துவது, இதை அவர் செய்ய வேண்டியதில்லை ஏனெனில் அவரே அது கிரிக்கெட் விதிகளுக்குட்பட்டதுதான் செய்துள்ளார் எனும்போது வெளியே மக்கள், ஊடகங்கள் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் சொல்லாடல்களிம் சுழல்வட்டப்பாதையில் சிக்கி சின்னாபின்னமாகி விடுவார், இந்த எச்சரிக்கை உணர்வை தோனியிடமிருந்து அனைவரும் கற்க வேண்டும்.

    இந்நிலையில் அன்று கொல்கத்தாவுக்கு எதிராக திரிபாதி த்ரோ ரிஷப் பந்த் உடலில் பட்டு ஓவர் த்ரோவாக பொதுவாக அதற்கு ரன் ஓட மாட்டார்கள் இது மரபு, அப்படி ரன் ஓடினாலும் அதை தடுக்க முடியாது ஏனெனில் விதி இந்த ரன்னை அனுமதிக்கிறது. விஷயம் இவ்வளவுதான் இதற்கு டிம் சவுதி ஏதோ கூற அஸ்வின் பதில் கூற மோர்கன் புகுந்து தரக்குறைவாகப் பேசியதுதான் இப்போது பெரிய விவகாரமாகியுள்ளது.

    மோர்கன் கூறியது யாருக்கும் தெரியவாய்ப்பில்லை, தினேஷ் கார்த்திக்தான் அதை போட்டு உடைத்தார், அதிலிருந்து இது பூதாகாரமாகக் கிளம்பி பலதரப்புகளிலிருந்தும் கருத்து மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் மட்டும் இந்தச் சம்பவத்தைக் கூறியிருக்காவிட்டால் இது விவகாரமே ஆகியிருக்காது என்று சேவாக் கூறியதோடு இப்படிப்பட்டதையெல்லாம் வெளியில் வந்து சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்கு உதாரண சம்பவம் ஒன்றைக் குறிப்பிடும் போது அஸ்வின் இதற்கு முன்னால் ஒருமுறை அநாகரீகமாக நடந்து கொண்டதையும் சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

    சேவாக் கூறியதாவது, “நான் பஞ்சாபுக்கு ஆடிய போது மேக்ஸ்வெல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அதைக் கொண்டாட தரையிலிருந்து மண்ணை எடுத்து ஊதி செய்கை செய்தார். இப்படிக் கொண்டாடினார் அஸ்வின். எனக்கு அஸ்வின் அப்படிச் செய்தது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் நான் பொதுவெளியில் வந்து அஸ்வின் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்றோ இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் இல்லை என்றோ கூறவில்லை. அது அதோடு முடிந்தது.

    ஆனால் எம்.எஸ்.தோனிக்கு அஸ்வினின் செய்கை பிடிக்கவில்லை, அஸ்வின் மீது மிகவும் கோபமடைந்து அஸ்வினை கடுமையாகக் கண்டித்தார்.” இவ்வாறு கூறினார் சேவாக்.

    Also Read: அஸ்வின் விவகாரத்தில் பெரிய குற்றவாளி தினேஷ் கார்த்திக்தான் - சேவாக் கடும் சாடல்

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: