• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனியை ஆலோசகராக நியமித்தது ஏன் தெரியுமா?- அருண் துமால் ‘டமால்’

தோனியை ஆலோசகராக நியமித்தது ஏன் தெரியுமா?- அருண் துமால் ‘டமால்’

தோனி-கோலி

தோனி-கோலி

தோனியை இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை ஆலோசகராக நியமித்தது யாரையும் கட்டுப்படுத்தவோ, எதிர்க்கவோ செய்யப்பட்ட ஏற்பாடு அல்ல. அவரால் அணிக்கு நன்மை கிட்டும் என்றுதான் நியமித்துள்ளோம் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    தோனியை இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை ஆலோசகராக நியமித்தது யாரையும் கட்டுப்படுத்தவோ, எதிர்க்கவோ செய்யப்பட்ட ஏற்பாடு அல்ல. அவரால் அணிக்கு நன்மை கிட்டும் என்றுதான் நியமித்துள்ளோம் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

    மீண்டும் இந்திய அணியின் சீருடையில் தல தோனியைப் பார்க்க ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பது ஒரு புறம் என்றாலும் கேப்டன் விராட் கோலியின் தத்துப்பித்து அணித்தேர்வுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் டாஸ் உள்ளிட்ட முடிவுகளில் கொஞ்சம் தலையீடு செய்யவும் தோனியை நியமித்தால்தான் சரிப்பட்டு வரும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் மறுபுறமும் தோனி நியமனத்தை வரவேற்கின்றனர்.

    கோலிக்கு செக் வைக்கவே, ரவிசாஸ்திரிக்கு செக் வைக்கவே தோனியை ஆலோசகராக நியமித்துள்ளனர் என்று பேச்சுக்களும் வதந்திகளும் ஒருபுறம் வளையவந்து கொண்டிருக்க பொருளாளர் அருண் துமால் கூறும்போது, “தோனி ஒரு கிரேட் லீடர், தோனி தலைமையில் 2007 உலகக்கோப்பை டி20, 2010, 2016 ஆசியக்கோப்பைகள், 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளோம்.

    அவரது சாதனைகள் அபாரம், அதனால் அவர் அணியின் ஆலோசகராக இருப்பது கிரேட். அணியில் அவர் மீது நல்ல மரியாதை உள்ளது, அணியிடத்தில் இவருக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. அதனால் அவரை அணியில் கொண்டு வந்தது யாருக்கும் செக் வைக்கவோ அல்லது யாருக்கு எதிராகவுமோ கிடையாது. அவர்களும் பெரிய காரியம் செய்துள்ளனர்.

    இதையும் படிச்சுப்பாருங்க: PBKS vs MI | மும்பை ஜெயிப்பதற்காக பாடுபட்டு ஆடிய பஞ்சாப்: ‘உஷ் கண்டுக்காதீங்க’ தருணங்கள்

    விராட் கோலி டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன்சியை உதறுவது முற்றிலும் கோலியின் முடிவு, நாங்கள் ஏன் அவரைப்போய் பதவி விலகச் சொல்ல வேண்டும். அவர் பிரமாதமாக அணியை வழிநடத்துகிறார்” என்றார் அருண் துமால்.

    இதற்காக இப்போதே விராட் கோலி தோனிக்கு  ‘ஐஸ்’ வைக்கத் தொடங்கிவிட்டார், இருவருக்குமான நட்புறவு பற்றிய கதையாடல்கள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: