• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கிய தோனி

சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கிய தோனி

சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கினார் தோனி!

சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கினார் தோனி!

நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
ராஞ்சியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்ட தோனி இன்று முதல் பயிற்சியில் களமிறங்கியுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி மேற்பார்வையில் கேப்டன் தோனி, துணை கேப்டன் ரெய்னா, அம்பதி ராய்டு, பியூஸ் சாவ்லா, கேதர் ஜாதவ், மோனு சிங், ஜெகதீஷ் நாராயணன், சாய் கிஷோர், கரண் ஷர்மா உள்ளிட்ட 13 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கொரோனோ வைரஸ் பரவல் ஊரங்கு போன்ற காரணங்களால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்திற்குள் வீரர்கள் தனி மனித இடைவெளியுடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மைதானத்திற்குள் அணி நிர்வாகிகள், வீரர்கள், மைதான பராமரிப்பாளர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Also read: தெலங்கானா: ரூ. 1.10 கோடி லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

ஐந்து நாட்கள் பயிற்சி முகாமில் சென்னை சூப்பர் கிங்ஸில் உள்ள இந்திய வீரர்கள் மட்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜடேஜா சொந்தக் காரணத்திற்காக சென்னை வரவில்லை; மற்ற 15 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஹர்பஜன் சிங் இன்னும் சென்னை வந்துசேராததால் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை.

ஐந்து நாட்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு ஆகஸ்ட் 21 ம் தேதி கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 22ம் தேதி தனி விமானம் மூலம் துபாய் புறப்படவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: