MS Dhoni's Parents: தோனியின் பெற்றோர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்: மருத்துவமனையிலிருந்து விடுவிப்பு

தோனியின் பெற்றோர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் வேளையில் குணமடைந்தோர் குறித்த செய்திகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. 

  • Share this:
    எம்.எஸ். தோனியின் தாயார் தேவகி தேவி, தந்தை பான் சிங் ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து ராஞ்சி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    ராஞ்சி தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு கோவிட் 19 சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா நெகெட்டிவ் என்று வந்தது, மேலும் இருவருக்கும் எந்த ஒரு உடல் உபாதைகளும் இல்லை.

    இந்நிலையில் இருவரையும் தனியார் மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ய சக்கர நாற்காலியில் தோனியின் தந்தை வெளியே வந்தார், தேவகி தேவியும் அவருடன் வீடு திரும்பினார்.

    இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்பதால் கடந்த ஏப்ரல் 20ம் தேதி புலே சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏப்ரல் 21ம் தேதி தோனி பெற்றோரின் ஆக்சிஜன் அளவு சரியாகவே உள்ளது என்று மருத்துவமனை தெரிவித்தது.

    ஆனாலும் தோனி பயோ பபுளை விட்டு வெளியே வந்தால் அவரும் குவாரண்டைன் முடிந்துதான் திரும்ப முடியும் என்பதால் தன் கிரிக்கெட் பணிகளைத் தொடர்ந்தார். சிஎஸ்கே தற்போது 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

    கடந்த வாரம் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது தோனி தன்னிடம் ராஞ்சியில் நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது என்று தெரிவித்ததாகக் கூறினார்.

    “நான் தோனியிடம் பேசினேன், அவர் ராஞ்சியில் சூழ்நிலை கட்டுக்குள்தான் உள்ளது பிரச்னையில்லை என்றார். சில நாட்களுக்கு சூழலை நெருக்கமாக அவதானிக்கவுள்ளோம்” என்றார்.

    இந்நிலையில் தோனிக்கும் சிஎஸ்கேவுக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக தோனியின் பெற்றோர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடுதிரும்பிய செய்தி வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் வேளையில் குணமடைந்தோர் குறித்த செய்திகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.
    Published by:Muthukumar
    First published: