M.S.Dhoni | எம்.எஸ். தோனியின் புகழ்பெற்ற 7-ம் எண் ஜெர்சியும் ரிட்டையர் ஆகிறது?

தோனி.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற லெஜண்ட் எம்.எஸ்.தோனி அணிந்த 7-ம் எண் ஜெர்சியையும் ரிட்டையர் செய்ய வேண்டும், அதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை என்கிறார் முன்னாள் விக்கெட் கீப்பர் சாபா கரீம். 

  • Share this:
    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற லெஜண்ட் எம்.எஸ்.தோனி அணிந்த 7-ம் எண் ஜெர்சியையும் ரிட்டையர் செய்ய வேண்டும், அதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை என்கிறார் முன்னாள் விக்கெட் கீப்பர் சாபா கரீம்.

    அதாவது ஓய்வு பெற்ற லெஜண்ட்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார் சாபா கரீம். 7ம் எண் ஜெர்சியை ரிட்டையர் செய்து விட்டால் அதை வேறு யாரும் அணிய முடியாது, இது அவருக்காக நாம் செய்யும் மரியாதை என்கிறார் அவர்.

    சச்சின் டெண்டுல்கரின் 10-ம் எண் ஜெர்சியை ஒருமுறை ஷர்துல் தாக்கூர் அணிந்தது பெரிய கூச்சல்களை ஏற்படுத்தியது, இதனையடுத்து பிசிசிஐ சச்சின் டெண்டுல்கரின் 10எண் ஜெர்சியை ரிட்டையர்டு செய்தது.

    ஜெர்சியைப் பாதுகாப்பது என்பது அவர்களது பாரம்பரியத்தைக் காப்பதோடு அவர்களுக்கான மரியாதையையும் தக்க வைக்கும் செயலாகும்.

    “எம்.எஸ்.தோனியின் ஜெர்சி மட்டுமல்ல, பல இந்திய லெஜண்ட்களின் ஜெர்சியையும் நாம் பாதுகாப்பது அவசியம். அவர்கள் அணிந்த அதே எண்ணுடைய ஜெர்சியை வேறு யாரும் அணியக் கூடாது. இதன் மூலம் கிரேட் பிளேயர்களின் சாதனைகளும் மரபும் காப்பாற்றப்படும். இதன் மூலம் அவர்களுக்கு தகுதியான மரியாதையையும் நாம் அளிப்போம்.” என்றார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தோனி ரிட்டையர் ஆனார். உடனேயே சுரேஷ் ரெய்னாவும் அதே தினத்தில்  ஓய்வு அறிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    “தோனி ரிட்டையர் ஆனாலும் அவர் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்குப் பங்களிப்பு செய்வார். சிஎஸ்கேவில் நிறைய இளம் வீரர்களை அவர் தயார்படுத்துகிறார். அதே போல் அவர் ஜார்கண்டிலும் செய்ய வேண்டும் என்று கருதுகிறேன். அது இந்திய கிரிக்கெட்டுக்கு பிரமாதமான பங்களிப்பாக அமையும்” என்றார் சாபா கரீம்.

    ஆனால் நம் கேள்வி என்னவெனில் எந்த இளம் வீரரை தோனி தயார் செய்து விட்டார், பாபா அபராஜித் என்ற் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்காமலேயே ஒழித்தார், முதல் ஐபிஎல் தொடரில் ஆடிய இளம் பவுலர் பழனி அமர்நாத் எங்கே? மற்ற இளம் வீரர்களெல்லாம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது. சாபா கரீம் விமர்சனமற்று வெறும் புகழ்வதற்காகப் புகழ்கிறார் என்று தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published: