• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021: அஸ்வின் கண்டபடி வீச தோனி ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்: சேவாகின் நுட்பம்

IPL 2021: அஸ்வின் கண்டபடி வீச தோனி ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்: சேவாகின் நுட்பம்

சேவாக்

சேவாக்

தோனியின் கேப்டன்சியைக் கொஞ்சம் தூக்கி அஸ்வின் பரிசோதனைகளை விமர்சித்துள்ளார் விரேந்திர சேவாக்.

  • Share this:
    சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அஸ்வின் என்னவோ போல் வீசினார், பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார், பந்துக்கு பந்து ஒவ்வொரு மாதிரியாக வீசத் தலைப்பட்டார், தோனி இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று தோனியின் கேப்டன்சியைக் கொஞ்சம் தூக்கி அஸ்வின் பரிசோதனைகளை விமர்சித்துள்ளார் விரேந்திர சேவாக்.

    சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேரம் பந்து, லெக் ஸ்பின், தூஸ்ரா என்று பந்துக்கு பந்து வேரியேஷன் காட்டியதோடு, வைட் ஆப் த கிரீசிலிருந்தும், ஸ்டம்புக்கு அருகிலிருந்தும் பல்வேறு விதமாக வீசினார் அஸ்வின், சிக்கனமாகவே வீசினார், ஆனால் எங்கு ஆஃப் ஸ்பின் வீசினால் வீறி விடுவார்களோ என்ற அளவுக்கதிகமான பயம்தான் அவரது பலத்திலிருந்தே அவரை அன்னியப்படுத்துகிறது என்கிறார் சேவாக்.

    இப்படி பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதால் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகளை அஸ்வின் இழக்கிறார் என்பதே சேவாகின் பாசிட்டிவ் விமர்சனம். ஆஃப் ஸ்பின் போட்டுக்கொண்டே பரிசோதனை பந்துகளை சர்ப்ரைசாக வீசி விக்கெட் எடுக்கும் திறன் கொண்டவர்தான் அஸ்வின். ஒரு அதாரிட்டியான கேப்டன் அஸ்வின் இப்படிப் போடுவதை அனுமதிக்க மாட்டார் அந்த வகையில் தோனி ஒரு அதாரிட்டி கேப்டன் என்கிறார் சேவாக்.

    இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சேவாக் கூறியதாவது: “ஆஃப் ஸ்பின் போட்டால் சிக்ஸ், பவுண்டரி என்று பின்னுவார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் நினைக்கிறார். இந்தப் பயத்தினால்தான் அவர் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறார். எம்.எஸ்.தோனி விக்கெட் கீப்பராக இருந்த போது அஸ்வினை ஒருபோதும் பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டார்.

    அவர் வீசும் விதம் பேட்டரை அவுட் செய்யும் வாய்ப்புக் குறைவுதான். ஆஃப் ஸ்பின் வீசினால் எல்பி., பவுல்டு ஆகும், இது போன்று வீசினால் அந்த வாய்ப்பு குறைகிறது. சிக்கனமாகவே வீசினார், ஆனால் ஒரு சீனியர் பவுலர் மிடில் ஓவர்களில் விக்கெடுகளை எடுத்துத் தர வேண்டும்” என்கிறார் சேவாக்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: