• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனி மீதான ஷாகிப் அல் ஹசனின் மரியாதை: அவரது ஐபிஎல் லெவனுக்கு தோனி கேப்டன்

தோனி மீதான ஷாகிப் அல் ஹசனின் மரியாதை: அவரது ஐபிஎல் லெவனுக்கு தோனி கேப்டன்

தோனி.

தோனி.

ஒவ்வொரு வீரரும் தன் ஆல்டைம் அணியைத் தேர்வு செய்வது ஒரு பொழுதுபோக்கு, அதே போல் வங்கதேச ஆல்ரவுண்டர் தன் ஆல்டைம் ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்து அந்த அணிக்கு எம்.எஸ்.தோனியைக் கேப்டனாக்கி அழகு பார்த்துள்ளார்.

  • Share this:
    ஒவ்வொரு வீரரும் தன் ஆல்டைம் அணியைத் தேர்வு செய்வது ஒரு பொழுதுபோக்கு, அதே போல் வங்கதேச ஆல்ரவுண்டர் தன் ஆல்டைம் ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்து அந்த அணிக்கு எம்.எஸ்.தோனியைக் கேப்டனாக்கி அழகு பார்த்துள்ளார்.

    ஷாகிப் அல் ஹசனின் இந்த அணியில் அதிரடி மன்ன, யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் இல்லை, அதைவிட ஆச்சரியம் 360 டிகிரி அசகாய சூரன் ஏ.பி.டிவிலியர்சும் இல்லை. ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மாவை சேர்த்திருக்கிறார், தோனி கேப்டன் என்றால் கிரிக்கெட் முடிந்து ஓய்வு பெற்ற பிறகான ஒரு கரியருக்கு இதன் மூலம் வழிவகை செய்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடுகிறார் ஷாகிப் அல் ஹசன். ஒருவேளை அவர் ஆர்சிபிக்கோ, சிஎஸ்கேவுக்கோ, மும்பை இந்தியன்ஸ் அணிக்கோ செல்லும் ஆசையில் தோனியை கேப்டனாக்கி தன் அணியில் விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடம் அளித்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கிறிஸ் கெய்ல் இல்லை என்ற ஷாகிப் அல் ஹசன், டேவிட் வார்னர், ரோகித் சர்மா தொடக்க வீரர்கள் என்கிறார்.

    3ம் நிலையில் விராட் கோலி. 4-ம் இடத்துக்கு சின்ன தல சிஎஸ்கேவின் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்துள்ளார் ஷாகிப் அல் ஹசன். அடுத்தபடியாக கே.எல்.ராகுல், பிறகு கேப்டன் தோனி. தன் பெயரையே தன் அணியில் சேர்க்காத ஷாகிப் அல் ஹசன், ராக்ஸ்டார் ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸை ஆல்ரவுண்டர்களாக சேர்த்துள்ளார்.

    அதே பவுலிங்கில் இலங்கை லெஜண்ட் மலிங்கா உள்ளார். பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் வேகப்பந்துக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜாதான் ஒரே ஸ்பின்னர்.

    ஷாகிப் அல் ஹசனின் ஆல் டைம் கிரேட் ஐபிஎல் லெவன் வருமாறு:

    ரோகித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், தோனி (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, மலிங்கா, பும்ரா, புவனேஷ்வர் குமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: