டி20 கிரிக்கெட் போட்டிகளின் திருவிழாவாகக் கருதப்படும் ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதற்கு முன்னதாகவே ஐபிஎல் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளன. மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முன்னணி அணிகள், வீரர்கள் தொடர்பான பேச்சுக்களும், அவர்களின் நகர்வுகள் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஜியோ சினிமா நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஐபிஎல் ஜாம்பவானாகக் கருதப்படும் கிறிஸ் கெயில் பங்கேற்றார். அவருடன் முன்னாள் வீரர்கள் அணில் கும்பளே, ராபின் உத்தப்பா, பார்திவ் படேல், ஸ்காட் ஸ்டைரீஸ் ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களிடம் பல்வேறு சுவாரஸ்சிமான கேள்விகள் கேட்கப்பட்டன. பேட்டியின் போது ராபிட் பயர் ரவுண்ட் எனப்படும் அதிரடி வேக கேள்விகள் இந்த வீரர்களிடம் கேட்கப்பட்டன.
அதில் ஒரு கேள்விக்கு அனைத்து வீரர்களும் ஒரே பதிலைக் கூறியது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே தன்னலமற்ற வீரர் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு, கெயில், கும்பளே என அனைத்து வீரர்களும் தன்னலமற்ற வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான் என்று ஒரு மனதாக பதில் அளித்துள்ளனர். கேப்டன் பதவி என்ற கனவுக்காக பலரும் காத்திருக்கும் போது, அதை வேண்டாம் என்று சொல்லி சிஎஸ்கே அணியின் வீரராக விளையாடியவர் தோனி. அவ்வாறு விலகுவது எளிதல்ல என்று தோனியை புகழ்ந்து பாராட்டினார்.
ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே அணியின் முகமாகவும் முகவரியாகவும் விளங்குபவர் தோனி. 2022இல் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற தோனி, தனது 41ஆவது வயதில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்குகிறார். இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் தொடராகக் கூட இருக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘ரோஹித் சர்மாவுக்கு பின்னர் இந்த 2 வீரர்களுக்கே அதிக வாய்ப்பு’ – கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் தனது கடைசிப்போட்டி இருக்கும் என்று விருப்பம் தெரிவித்த தோனி, மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இந்தாண்டு தான் சேப்பாக்கத்தில் விளையாட உள்ளார். எனவே, தல தோனியின் ரசிகர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த முறை ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பை விட்டுக்கொடுத்து பரிசோதனை முயற்சி செய்த நிலையில்,இம்முறை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் களமிறங்கவுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chris gayle, Dhoni, IPL, IPL 2023, MS Dhoni