Dhoni | தோனியின் புதிய கெட்-அப்!  சிம்லாவில் உறவினர், குடும்பத்தினருடன் ஜாலி ட்ரிப்

சிம்லாவில் தோனி.

கடந்த 3 ஆண்டுகளில் தற்போது 2வது முறையாக சிம்லாவுக்கு தோனி சென்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு தனியார் நிதி நிறுவன நிறுனத்தின் விளம்பர படபிடிப்பிற்காக சிம்லா சென்றிருந்தார்.

  • Share this:
    சிஎஸ்கே கேப்டன் தோனி தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றால் சிம்லாவில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சிச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த 3 ஆண்டுகளில் தற்போது 2வது முறையாக சிம்லாவுக்கு தோனி சென்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு தனியார் நிதி நிறுவன நிறுனத்தின் விளம்பர படபிடிப்பிற்காக சிம்லா சென்றிருந்தார்.

    அப்போது அவர் தன் பைக்கில் சிம்லாவை வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஐபிஎல் 2ம் பகுதி நடப்பு ஐபிஎல் சீசனில் தோனியின் பழைய அதிரடியை ரசிகர்கள்  எதிர்பார்த்து ஏமாந்துள்ளனர்.

    Also Read: இந்திய அணியைக் காப்பாற்றிய மழை: மைக்கேல் வான் கிண்டலும் நெட்டிசன்களின் அபத்த ஆவேசமும்

    ஆனால் அவரின் சிறப்பான கேப்டன்சியில் சிஎஸ்கே அணி மீண்டு வந்து 2ம் இடம் பிடித்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. வரும் செப்டம்பரில் தொடங்கவிருக்கும் ஐபிஎல்-ன் 2ம் பகுதியில் தோனியின் பழைய ஃபார்மை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    Also Read: ஜேமிசனை ஆடத் தெரியாமல் 71 ரன்களில் 7 விக். பறிகொடுத்த இந்தியா! இந்திய பேட்ஸ்மென்கள், பவுலர்கள் திணறல்: நியூசிலாந்து ஆதிக்கம்

    இதனால் தோனியை சிம்லாவில் கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தோனி முறுக்கு மீசையுடன் புதிய கெட்-அப்பில் இருப்பதால் அவரை அடையாளம் காண்பதிலும் ரசிகர்களுக்கு முதலில் குழப்பம் ஏற்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தோனி தன் குடும்பத்தினர், உறவினர் என்று 13 பேருடன் சுற்றுலா சென்றுள்ளார். இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இமாச்சலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன,  ஆர்.டி. பிசிஆர் டெஸ்ட் நெகெட்டிவ் என்று காட்டும் ரிப்போர்ட் இருந்தால்தான் அங்கு அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.

    இப்போது அது தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அங்கு வரத் தொடங்கியுள்ளனர். மேலும் 144 தடை உத்தரவையும் இமாச்சலம் நீக்கி விட்டது.
    இந்நிலையில் சிம்லாவில் திடீரென தோனியைப் பார்த்த ரசிகர்கள் குஷியாகி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: