விளையாட்டு

  • associate partner

இந்தியா திரும்பிய தோனியின் செயலை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்

MS Dhoni | தோனி அவரது சகோதரர் மற்றும் நண்பருடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்தியா திரும்பிய தோனியின் செயலை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்
மகேந்திர சிங் தோனி
  • Share this:
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2020 போட்டிகளுக்கு பின் இந்தியா திரும்பிய தோனியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த பின் ஐ.பி.எல் தொடரை எதிர்கொண்டார். ஆனால் நடப்பு ஐ.பி.எல் சீசன் சி.எஸ்.கே அணிக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது.

ஐ.பி.எல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் சி.எஸ்.கே தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதன்முறையாகும். மோசமான பீல்டிங், எடுபடாத பந்துவீச்சு, சோபிக்காத ஒபனிங் என அனைத்தும் சி.எஸ்.கே-விற்கு பின்னடைவாகவே இருந்தது. இதனால் இதுவரை இல்லாத மோசமான தோல்வியை சி.எஸ்.கே இந்த சீசனில் அடைந்தது.


அதனுடன் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீதான விமர்சனும் அதிகமானது. ஆனால் அடுத்த ஐ.பி.எல் சீசனிலும் விளையாடுவேன் என்று அறிவித்து அனைத்திற்கு விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் தோனி.`

ஐ.பி.எல் 2020 தொடரில் லீக் போட்டியுடன் சி.எஸ்.கே வெளியேறியதால் அணி வீரர்கள் ஐக்கிய அமீரகத்திலிருந்து திரும்பினர். கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இந்தியா திரும்பினார். இந்திய திரும்பிய தோனி அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு தயராகும் வகையில் ஜிம்முக்கு சென்றுள்ளார்.தோனி அவரது சகோதரர் மற்றும் நண்பருடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஐ.பி.எல் 2021 தொடர் மார்ச் நடைபெறும் என்பதால் இப்போது தோனி தயாராகி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்a
First published: November 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading