CSK vs KKR | தோனி அடித்த பவுண்டரி... ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை

CSK vs KKR | தோனி அடித்த பவுண்டரி... ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை

மகேந்திர சிங் தோனி

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சுனில் நரைன் பந்துவீச்சில் மகேந்திர சிங் தோனி பவுண்டரி அடித்துள்ளார். இந்த பவுண்டரிக்காக அவர் எத்தனை பந்துகளை எதிர்கொண்டார் என்பது தான் சுவாரஸ்யமே.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடர் சென்னை மற்றும் மும்பையில் உள்ள மைதானங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 220 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் டூ-பிளெசிஸ் 95 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழாக்கமல் இருந்தார். மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் 64 ரன்கள் விளாசினார். தொடக்க ஜோடியின் அதிரடியால் சிஎஸ்கே அணி 220 ரன்கள் எடுத்தது.

    மகேந்திர சிங் தோனி நேற்றைய போட்டியில் 4-வது வீரராக களமிறங்கி 8 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைன் பந்துவீச்சில் தோனி முதன்முறையாக பவுண்டரி விளாசி உள்ளார். 17-வது ஓவரில் மொயீன் அலி விக்கெட்டை சுனில் நரைன் வீழ்த்தினார். அதே ஓவரில் நோ பால் வீசியதால், அடுத்த பந்து ஃப்ரி ஹிட் கிடைத்தது. அந்த பந்தை தோனி பவுண்டரி அடித்தார்.

    ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் பந்துவீச்சில்தோனி இதுவரை 65 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2012 ஐபிஎல் தொடரிலிருந்து  சுனில் நரைன் விளையாடி வருகிறார். இந்த சீசனில் தான் சுனில் நரைன் பந்துவீச்சில் தோனி பவுண்டரி அடித்துள்ளார். தோனி 19-வது ஓவரில் ரஸல் பந்துவீச்சில் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
    Published by:Vijay R
    First published: