Home /News /sports /

காக்கி சட்டை, முரட்டு மீசை... ரஜினி ஸ்டைலுக்கு மாறிய தல தோனி... மாஸ் காட்டும் வீடியோ

காக்கி சட்டை, முரட்டு மீசை... ரஜினி ஸ்டைலுக்கு மாறிய தல தோனி... மாஸ் காட்டும் வீடியோ

ரஜினி ஸ்டைலுக்கு மாறிய தல

ரஜினி ஸ்டைலுக்கு மாறிய தல

MS Dhoni | Rajinikanth | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த ஸ்டைலில் மாஸ் காட்டும் ஐபிஎல் முன்னோட்ட புராமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடர் 2022 மார்ச் 26-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரை பிரபலப்படுத்தும் வகையில் மகேந்திர சிங் தோனி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் நடித்துள்ள புரோமோவின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த புரோமோவில் வரும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் அசல் ரஜியாகவே மாறி உள்ளார்.

    காக்கி சட்டை, போலி மீசை, கூலிங் கிளாஸ் என பஸ் ஓட்டுநர் போல் நடித்துள்ளார். ரஜினிக்கு உண்டான கூலிங் கிளாஸை கழற்றி போடும் காட்சிகளில் மகேந்திர சிங் தோனி மாஸ் காட்டி உள்ளார். இந்த பிராமோ காட்சிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.







    ஐபிஎல் போட்டி முறை

    ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன, குழுவுக்கு 5 அணிகள் ஒரு அணி மற்ற 4 அணிகளை எதிர்த்து இருமுறை ஆடும் (8 போட்டிகள்) ஒன்று தங்கள் மண்ணில் இன்னொன்று வெளியே. மற்ற பிரிவில் உள்ள 4 அணிகள் ஒருவரை எதிர்த்து ஒருவர் ஒரு போட்டியில் ஆட வேண்டும்.

    குரூப்கள்

    குரூப் ஏ – மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்), டெல்லி கேபிடல்ஸ் (டிசி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி)

    குரூப் பி- சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் குஜராத் டைட்டன்ஸ்.
    Published by:Vijay R
    First published:

    Tags: IPL 2022, MS Dhoni, Rajinikanth

    அடுத்த செய்தி