ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராகுல் திராவிட் கடைசியாக வழிநடத்தும் போது அவருக்கு வயது 40 ஆண்டுகள் 268 நாட்கள். இப்போது, நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தோனி தன் கேப்டன் பதவியை மீண்டும் ஏற்ற போது தோனியின் வயது 40 ஆண்டுஅக்ள் 298 நாட்கள் இதன் மூலம் திராவிட்டின் இந்தச் சாதனையையும் தோனி கடந்து விட்டார்.
இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் சுனில் ஜோஷி 40 ஆண்டுகள் 135 நாட்கள், அனில் கும்ப்ளே 39 ஆண்டுகள் 342 நாட்கள், சௌரவ் கங்குலி 39 ஆண்டுகள் 316 நாட்கள்.
ஜடேஜா தனக்கு சிஎஸ்கே கேப்டன்சி வேண்டாம் என்று திருப்பி தோனியிடம் கொடுத்து விட்டார். சிஎஸ்கே ஜடேஜா தலைமையில் 8 போட்டிகளில் 6-ல் தோற்றது. நேற்றைய வெற்றி தோனியின் கேப்டன்சியில் அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இதோடு ஜடேஜா பார்மும் சரிவு கண்டது பேட்டிங்கில் 112 ரன்களையும் பவுலிங்கில் வெறும் 5 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்துள்ளார். நேற்று தோனியுடன் அணியின் தொடக்கத்தில் டெவன் கான்வேயை இறக்கி விட்டது பெரிய அளவில் சிஎஸ்கேவின் வெற்றியைத் தீர்மானித்தது, கான்வே போன்ற வீரர்களுடன் ஆடும்போது ருதுராஜ் போன்ற ஆவரேஜ் வீரர்களும் ஜொலிக்கிறார்கள்.
நேற்று தோனியின் பந்து வீச்சு மாற்றம், களவியூகம் மிகவும் பிரமாதமகா அமைந்தது, அடிதடி பேட்டர்களுக்கு புதிய உத்தியாக ஸ்பின்னர்களை விட்டு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தள்ளி வீசச் செய்து ஆஃப் சைடில் களவியூகத்தை டைட்டாக வைத்துக் கொள்வது, இது சன்ரைசர்ஸை முடக்கியது.
ஸ்பின் பவுலர்கள் தோனியின் களவியூக அமைப்பில் பிரமாதமாக வீசினர், இருந்தாலும் சிலபல கேட்ச்களை விட்டதால் சன் ரைசர்ஸ் அணி 189 வரை வந்தது, சிஎஸ்கே 202 ரன்களை எடுக்கவில்லை எனில் தோற்கக் கூட வாய்ப்பிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, Dhoni, IPL 2022, Rahul Dravid