Home /News /sports /

”சென்னை அணிக்காக அடுத்தாண்டும் நிச்சயம் விளையாடுவேன்”.. தோனி கொடுத்த சர்ப்ரைஸ்!!

”சென்னை அணிக்காக அடுத்தாண்டும் நிச்சயம் விளையாடுவேன்”.. தோனி கொடுத்த சர்ப்ரைஸ்!!

”சென்னை அணிக்காக அடுத்தாண்டும் நிச்சயம் விளையாடுவேன்”.. தோனி கொடுத்த சர்ப்ரைஸ்!!

”சென்னை அணிக்காக அடுத்தாண்டும் நிச்சயம் விளையாடுவேன்”.. தோனி கொடுத்த சர்ப்ரைஸ்!!

Ms Dhoni | வரும் சீசன்களில் அனைத்து மைதானங்களிலும் விளையாடும் போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நன்றி சொல்லி விடை பெறுவதே சரியாக இருக்கும் என தோனி தெரிவித்துள்ளார்.

    சென்னை அணிக்காக அடுத்தாண்டு ஐபிஎல் சீசனிலும் நிச்சயம் விளையாடுவேன் என சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் மொத்தம் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 9 போட்டிகளில் தோல்வியை தழுவியது. தொடர்ந்து, இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

    பின்னர், மைதானத்தில் வர்ணனையாளரின் கேள்விகளுக்கு தோனி பதில் அளித்தார். அப்போது, தோனியிடம் அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நிச்சயமாக. ஏனெனில் சென்னை ரசிகர்களுக்கு நேரில் நன்றி சொல்லாமல் செல்வது நியாயமாக இருக்காது. மும்பை எங்களது அணிக்காகவும், தனி மனிதனாக எனக்காகவும் நிறைய அன்பையும், பாசத்தையும் தந்துள்ளது.

    எனினும், சென்னை மைதானத்தில் விளையாடாமல் மும்பையிலேயே விடைபெற்றுக் கொள்வது சென்னை ரசிகர்களுக்கு உகந்ததாக இருக்காது. வரும் சீசன்களில் அனைத்து மைதானங்களிலும் விளையாடும் போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நன்றி சொல்லி விடை பெறுவதே சரியாக இருக்கும் என்றார்.

    தொடர்ந்து, அது எனது கடைசி ஆட்டமாக இருக்குமா, இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வியே, ஏனென்றால் இரண்டு வருடங்கள் கடந்து நடக்கும் ஒன்றைப் பற்றி நம்மால் கணிக்க முடியாது, ஆனால் நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப கடினமாக உழைக்கிறேன்," என்று தோனி கூறினார்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: CSK, IPL 2022, MS Dhoni

    அடுத்த செய்தி