• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுகிறார் - தகவல்

ஐபிஎல் அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுகிறார் - தகவல்

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணியினல் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

  • Share this:
    ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு ஆரம்பித்தது முதலே சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தோனியின் கேப்டன்ஷிப் தான் காரணமாக இருந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

    வயது காரணமாக மகேந்திர சிங் தோனி தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதைப் பார்க்கலாம். எனது கடைசி ஆட்டத்தை அங்கே விளையாடுவேன். ரசிகர்கள் எனது கடைசி ஆட்டத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படித்தான் விடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று தோனி தெரிவித்திருந்தார்.

    இதனிடையே துபாயில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ்க்கு பின் பேசிய தோனி, அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் ஜெர்ஸியில் பார்க்கலாம். ஆனால், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என எனக்குத் தெரியாது. அடுத்த சீசனில் புதிதாக இரு அணிகள் வருகின்றன என்பதால், ஏராளமான நிச்சயமற்ற தன்மைகள் சுற்றி இருக்கின்றன. எந்த மாதிரியான தக்கவைப்புக் கொள்கை இருக்கும் என எங்களுக்குத் தெரியாது.

    Also Read : மும்பை இந்தியன்ஸில் நீடிப்பாரா ரோகித் சர்மா?- ‘பிரஷர்’ குறித்து சூசகம்

    எத்தனை வெளிநாட்டு வீரர்களை, உள்நாட்டு வீரர்களைத் தக்கவைக்கப் போகிறார்கள் என எனக்குத் தெரியாது. விதிகள் நடைமுறைக்கு வராதவரை, தெரியாதவரை உங்களால் எதையும் முடிவு செய்ய முடியாது. என்ன நடக்கும் என்பதை பொறுமையாகப் பார்க்கலாம். அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என நம்புவோம்“ என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகி கூறுகையில், “சிஎஸ்கே அணியிலிருந்து பிரிக்க முடியாதவர் தோனி. அவருக்குப் பிரியா விடை அளிக்கும்போது, சென்னையில் அவர் களமிறங்க வேண்டும் என்று நிர்வாகம் விரும்புகிறது. ஆதலால், சிஎஸ்கே அணியில் அடுத்த சீசனில் தோனி விளையாடமாட்டார் என நான் நினைக்கவில்லை. சேப்பாக்கத்தில் தோனி தனது கடைசி ஆட்டத்தை விளையாடுவதை ரசிகர்கள் பார்க்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: