முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் சாம்பியனான பிறகு 48 மணி நேரத்தில் முற்றிலும் மாறிய தோனி

ஐபிஎல் சாம்பியனான பிறகு 48 மணி நேரத்தில் முற்றிலும் மாறிய தோனி

நடுவில் நிழல் பேட்டிங் செய்யும் தோனி.

நடுவில் நிழல் பேட்டிங் செய்யும் தோனி.

விராட் கோலி டி20 கேப்டனாக கடைசியாகப் பணியாற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்குரிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இங்கிலாந்தைச் சந்திக்கிறது. வலுவான இங்கிலாந்தை முறியடிக்க மெண்ட்டாராக சிஎஸ்கே சாம்பியன் கேப்டன் தோனி இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விராட் கோலி டி20 கேப்டனாக கடைசியாகப் பணியாற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்குரிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இங்கிலாந்தைச் சந்திக்கிறது. வலுவான இங்கிலாந்தை முறியடிக்க மெண்ட்டாராக சிஎஸ்கே சாம்பியன் கேப்டன் தோனி இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

இவர் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாலர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் ஆகியோருடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டார், தோனியின் இம்பேக்ட் என்னவென்பது இன்றைய வார்ம் அப் போட்டியில் அணித்தேர்வு முதல் உத்தி வரை தெரிந்து விடும்.

சிஎஸ்கே அணியை 4வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்ற தோனி 48 மணி நேரத்தில் இந்திய அணியை டி20 உலகக்கோப்பையை வெல்ல வைப்பதில் தன்னை அணியுடன் இணைத்துக் கொண்டார், பயிற்சியாளர்களுடன் ஆலோசனையில் இறங்கினார். ஐபிஎல் பயோ பபுள் என்ற கொரோனா பாதுகாப்பு வளையத்திலிருந்து இந்திய அணியின் பயோ பபுளுக்கு மாறினார்.

2007 டி20 உலகக்கோப்பையின் போது பேட்டி அளித்த தோனி தொடரில் தோற்றாலும் கவலைப்பட மாட்டோம், கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக ஆடி, வீரர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி துள்ளலுடன் ஆட வேண்டும் என்பதையே விரும்பினார். அதே போன்ற ஒரு அட்மாஸ்பியரை இங்கு விரைவில் உருவாக்குவார். விராட் கோலி உருவாக்கிய ஒரு இருண்ட சூழ்நிலை அல்லாமல், அதாவது வீரர்கள் அடுத்த போட்டியில் நாம் இருப்போமா மாட்டோமா என்ற பயத்துடனேயே ஆடும் சூழ்நிலை போய் சிஎஸ்கே போன்ற ஒரு பாதுகாப்பான சூழலை, அதுதான் வெற்றி ரகசியமும் கூட, இங்கு உருவாக்குவார் என்று பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்குத் தேவையா அல்லது வேறு ஆல்ரவுண்டரை எடுக்க வேண்டுமா என்பதில் தோனியின் பங்கு அதிகமிருக்கும். ஒரு சேர்க்கையை உருவாக்கி அதே அணியை கடைசி வரை கொண்டு போக வேண்டும் என்பது போல் தோனி பார்ப்பார் என்று தெரிகிறது. சிஎஸ்கேவில் கடைப்பிடித்த அதே பார்முலாதான்.

அணியின் காம்பினேஷனை உறுதி செய்ய இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய வார்ம் அப் போட்டி பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வார்ம் அப் போட்டிகளை தோனி உள்ளிட்ட கோச்கள் கூர்ந்து கவனிப்பார்கள் என்று தெரிகிறது, அதனால் இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளித்து யார் தேறுவார்கள் என்ற ரீதியில்தான் தோனி யோசிப்பார் என்று தெரிகிறது.

Also Read: T20WC| இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்: காஷ்மீரில் கொல்லப்பட்ட பானிபூரி விற்பனையாளர் சகோதரர் ஆவேசம்

குறிப்பாக ரோகித் சர்மாவின் தொடக்க பார்ட்னராக ராகுலா, இஷான் கிஷனா என்பதை முடிவு செய்ய இந்த இரண்டு வார்ம் அப் போட்டிகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தோனியின் வரவு அணியில் இளம் வீரர்களுக்கு புதிய நம்பிக்கை ஊட்டியுள்ளது.

First published:

Tags: India Vs England, IPL 2021, MS Dhoni, T20 World Cup