தோனியின் சொதப்பலான, மகா அறுவையான பேட்டிங் குறித்து 2019-க்கு முன்பிருந்தே கடும் விமர்சனங்களும், கேலிப்பார்வைகளும் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட் பிரையன் லாரா, தோனி பேசாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே என்று கூறியுள்ளார்.
வேறு எந்த கிரிக்கெட்டுமே ஆடாமல் நேரடியாக ஐபிஎல் மட்டுமே தோனி ஆடுகிறார், தனது விக்கெட் கீப்பிங் சிரமங்களுக்கு ஏற்பவே அவர் பந்து வீச்சு மாற்றங்களைச் செய்கிறார். தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் போன்றவர்களை கீப் செய்வது சுலபம்தான். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர்களும் பெரிய முயற்சி எடுத்து வேகமெல்லாம் வீச மாட்டார்கள், தோனியும் வேகப்பந்து வீச்சை ஊக்குவிப்பவர் அல்ல. ஸ்பின் அவருக்கு கீப்பிங் செய்ய மிகவும் எளிதாக இருக்கும்.
தோனி எந்த டவுனில் இறங்கினாலும் ஆடுவதில்லை, அவர் மட்டையிலிருந்து சிக்சர்கள் பறந்த காலம் போய் தற்போது அருகில் இருக்கும் வீரர்கள், விக்கெட் கீப்பர் போன்றோருக்கு வெறும் காத்துதான் வருது. அவரே கூட தன் பேட்டிங் திறனுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்க முடியாது.. 24 வயதிலேயே நன்றாக ஆடுவதற்கான உத்தரவாதம் அளிக்க முடியாது 40 வயதிலா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பிரையன் லாரா கூறியதாவது:
தோனியை சிரமப்படுத்தக் கூடாது என்று கருதுகிறேன். பேட்டிங்கில் அவரை கூடுதல் முயற்சி எடுக்க வற்புறுத்தக் கூடாது.
அவர் கைகளில் கிளவ் மாட்டிக் கொண்டு கேட்ச்களை எடுக்க வேண்டியிருக்கிறது, கேப்டன்ஷிப் செய்ய வேண்டியிருக்கிறது. ஸ்டம்பிங் செய்ய வேண்டியிருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் ரொம்ப நீளமானது, ஆகவே தோனி எதற்கு சிரமப்பட வேண்டும், அவர் பேசாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
அவர் பேட்டிங்கில் எப்படி சேதம் விளைவிப்பார் என்பது நாம் அறிந்ததே, ஆனால் சிஎஸ்கே அணியில் நிறைய வேறு நல்ல வீரர்கள் உள்ளனர். சாம் கரணை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். வந்தது முதல் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஷாட்களை அவர் ஆடுகிறார்.
சிஎஸ்கேவிடம் இம்முறை நல்ல அணி உள்ளது, நல்ல உத்வேகமான (?!) கேப்டன் தோனி இருக்கிறார். தோனி மற்றவர்களிடமிருந்து திறமையை வெளிக்கொண்டு வந்தால் போதுமானது இந்த முறை கோப்பையை எளிதில் சிஎஸ்கே வென்று விடும்.
இவ்வாறு கூறினார் பிரையன் லாரா.
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brain Lara, Dhoni batting, IPL 2021, MS Dhoni