• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • காசு பணம் துட்டு மணீ மணீ- இல்லையெனில் பெட்ரோல் பங்க்தான் - ஹர்திக் பாண்டியா மனம் திறப்பு

காசு பணம் துட்டு மணீ மணீ- இல்லையெனில் பெட்ரோல் பங்க்தான் - ஹர்திக் பாண்டியா மனம் திறப்பு

ஹர்திக் பாண்டியா (hardik pandya)

ஹர்திக் பாண்டியா (hardik pandya)

கிரிக்கெட்டில் பணம் இல்லாவிட்டால் இளம் வீரர்கள் ஆர்வமாக வருவார்களா, கிரிக்கெட் இல்லாவிட்டால் தான் கூட பெட்ரோல் பங்கில்தான் வேலைப் பார்த்திருப்பேன் என்று ஹர்திக் பாண்டியா நேர்காணல் ஒன்றில் மனம் திறந்தார்.

  • Share this:
    பரோடாவில் அவ்வளவாக நிதி வச்தி இல்லாத குடும்பத்தில் பிறந்து சிறிய குடியிருப்பில் இருந்தவர்கள்தான் ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா குடும்பத்தினர். ஆனால் அடிச்சது லக்கி பிரைஸ், மும்பை இண்டியன்ஸ் வாசம் பணமழை ஐபிஎல் என்று வாழ்க்கையையே உல்லாசத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது. இன்று ஆடம்பர வாழ்க்கை, கார், பணம், பங்களா என்பார்களே அது போன்று வாழ்ந்து வருகின்றனர்.

    முதலில் ஹர்திக் பாண்டியா ரூ.10 லட்சத்துக்குத்தான் ஏலம் எடுக்கப்பட்டார், ஆனால் பிறகு அடிச்ச லக்கி பிரைசில் ரூ.11 கோடி பிறகு கொடுக்கப்பட்டார், குருணால் பாண்டியாவுக்கு 9 கோடி. இந்நிலையில் கிரிக்கெட்டில் பணத்தின் தாக்கம் குறித்து இணையதளம் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியது இதற்கு ஹர்திக் பாண்டியா அளித்த பதில் சுவாரசியமானது.

    “கிரிக்கெட்டில் மட்டும் பணம் இல்லாவிட்டால் இன்று நான் ஏதாவது ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து கொண்டிருப்பேன். பணம் கிடைத்தாலும் நாங்கள் ஒன்றும் உயரே பறக்கவில்லை, எதார்த்தத்தை உணர்ந்து தரையில் கால்பதித்துத்தான் உண்மையை அறிந்தே வாழ்கிறோம். நான் ஏதோ பறப்பது போல் பலருக்கும் தெரியலாம் ஆனால் நான் அப்படியல்ல.

    பணம் அனைத்தையும் மாற்றியிருக்கிறது. பணம் இல்லாவிட்டால் நான் பெட்ரோல் பங்க்கில்தான் வேலை பார்த்திருப்பேன். விளையாட்டை வாழ்க்கையாக எடுத்து இளைஞர்கள் சாதிக்க பணம் முக்கியமானது. ஆனால், கிரிக்கெட்டில் பணம் மட்டும் இல்லாவிட்டால் எத்தனை இளைஞர்கள் இந்தவிளையாட்டை ஆர்வமாக விளையாடுவார்கள்.

    நண்பர் ஒருவர் என்னிடம் கிரிக்கெட்டில் பணம் கூடாது, நீங்களெல்லாம் இளம் வீரர்கள் என்றார். அவர் பேச்சில் எனக்கு உடன்பாடில்லை, கிராமத்திலிருந்து வரும் ஒரு வீரர் சம்பாதிக்கும் பணம் அவருக்குக் குடும்பத்துக்கு பேருதவியாக இருக்குமே என்றேன். பணத்தை பற்றி பேசக்கூடாது, பணம் சம்பாதிப்பது தவறு என்ற தவறான பார்வை இன்னமும் இருக்கிறது” என்றார் ஹர்திக் பாண்டியா.

    ஆனால் பணம் சம்பாதிப்பதை யாரும் குறைசொல்ல மாட்டார்கள், பணத்துக்காக நேர்மை, உண்மை, விசுவாசம், கடமை அனைத்தையும் அடகு வைப்பதைத்தான் பெரியோர்கள் விமர்சித்துள்ளனர். பணம் சம்பாதிப்பதே தவறு என்று யாரும் கூறவில்லை, தவறான முறையில் சம்பாதிப்பதுதான் விமர்சனப்படுத்தப்படுகிறது என்பதை யாராவது பாண்டியாவுக்குக் கூறினால் நன்றாக இருக்கும்.

    Also Read: T20 WC warm-up:கோலி இல்லை-ஹாட்ரிக் வாய்ப்பில் அஸ்வின்- வார்னர், மார்ஷ் அவுட்- ஆஸ்திரேலியா 11/3
     Also Read: டி20 உலகக் கோப்பையெல்லாம் சும்மா-50 ஓவர் உலகக்கோப்பைதான் பெஸ்ட், - கவுதம் கம்பீர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: