மொயின் அலிக்கு காயம்..? அடுத்தப் போட்டியில் களமிறக்க 2 வீரர்களை குறிவைக்கும் சி.எஸ்.கே

மொயின் அலிக்கு காயம்..? அடுத்தப் போட்டியில் களமிறக்க 2 வீரர்களை குறிவைக்கும் சி.எஸ்.கே

மொயின் அலி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஃப்ல்டிங்கின் போது மொயின் அலிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் பந்துவீசாமல் போட்டியிலிருந்து விலகி இருந்தார்.

 • Share this:
  கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடியாக விளையாடி கம்பேக் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. பவர்பிளேவில் ஸ்லோவாக சிஎஸ்கே விளையாடுகிறது என்று பலர் விமர்சித்து வந்த நிலையில் நேற்றைய போட்டி அனைவரையும் வாயடைக்க வைத்தது.

  சிஎஸ்கே வெற்றிபாதைக்கு திரும்பி உள்ள நிலையில் 3வது வீரராக களமிறங்கும் மொயின் அலி அதிரடியாக விளையாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மொயின் அலி நேற்றைய போட்டியில் ஃப்ல்டிங்கின் போது காயமடைந்தார்.

  மொயின் அலிக்கு காலில் காயம் ஏற்பட்டதால் நேற்றைய போட்டியில் பவுலிங் வீசாமல் பெவிலியன் திரும்பினார். இதுவரை மொயின்  அலியின் காயம் குறித்து சிஎஸ்கே எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. ஒருவேளை அடுத்தப் போட்டி வரை அவருக்கு காயம் தொடர்ந்தால் அவருக்கு பதிலாக 2 மாற்று வீரர்களை சிஎஸ்கே குறிவைத்துள்ளது.

  மொயின் அலி வெளிநாட்டு வீரர் என்பதால் அவருக்கு பதில் மிட்சல் சாண்டனர் களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும் பயிற்சி போட்டியில் சிறப்பாக பந்துவீசி தோனியின் கவனத்தை ஈர்த்த கிருஷ்ணப்பா கவுதமிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். மொயின் அலி அடுத்தப் போட்டியில் களமிறங்கவில்லை விளையாடும் 11 வீர்களில் முக்கிய மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

  மொயின் அலி காயம் காரமணாக அடுத்தப் போட்டியில் இருந்து விலகினால் மட்டுமே சிஎஸ்கே அணயில் மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. லோசன காயமிருந்து அவர் மீண்டும் அணியில் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
  Published by:Vijay R
  First published: