விளையாட்டு

  • associate partner

யார்க்கர் புயல் நடராஜனிடம் பேசினேன், கனவுகள் நிறைவேறட்டும் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்திக்கு தோளில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

யார்க்கர் புயல் நடராஜனிடம் பேசினேன், கனவுகள் நிறைவேறட்டும் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடராஜன் - மு.க.ஸ்டாலின்
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2020 தொடரில் இந்திய அணி வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். ஐ.பி.எல் 2020 தொடர் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. ஐ.பி.எல் 2020 தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது.


ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த நடராஜன் கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்திக்கு தோளில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

சேலத்தை சின்னம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் இந்திய அணியில் தேர்வாகி உள்ளதற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நடராஜனை வாழ்த்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.



அதில், “இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! நடராஜன்உடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்! அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்!“ என்றுள்ளார்.











ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading