தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் புதிய டி20 லீகில் 6 ஐபிஎல் உரிமையாளர்கள் அணிகளை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனால் அது ஒரு மினி ஐபிஎல் தொடராகவே இருக்கும் என்று ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன. இந்த புதிய டி20 லீக் தொடர் பிப்ரவரி-மார்ச் 2023-ல் நடைபெறும்.
இந்தத் தொடருக்கான ஏலம் 13ம் தேதியே முடிந்து விட்டது என்று ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ், என்.ஸ்ரீநிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்சின் பார்த் ஜிண்டால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தமிழ்நாட்டு உரிமையாளர்களான மாறன் சகோதரர்கள், லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் சஞ்சிவ் கோயெங்கா, ராஜஸ்தான் ராயல்ஸின் மனோஜ் பதாலே ஆகியோர் 6 அணிகளை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த மாத இறுதியில் அனைத்து விவரங்களையும் வெளியிடுவதாக கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கூறியுள்ளது. இவர்கள் ஏற்கெனவே 6 அணிகளை வாங்குவது முடிவாகி விட்டதாகவும் தெரிகிறது.
கெவின் பீட்டர்சன் தலைமை கூட்டமைப்பு ஒன்றும் ஏலத்தில் இருந்ததாகவும் ஆனால் ஐபிஎல் உரிமையாளர்களின் பணபலத்துக்கு முன்னால் நிற்க முடியவில்லை என்றும் அந்த ஊடக அறிக்கை கூறுகிறது.
கேப்டவுனிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் தென் ஆப்பிரிக்க லீக் அணியை உருவாக்கும் என்றும் சிஎஸ்கே அணி உரிமை ஜோஹன்னஸ்பர்க்கை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் ஓனர் ஜிண்டால் அணி செஞ்சூரியனை அடிப்படையாக கொண்டிருக்கும்.
மீதமுள்ள இடங்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் போர்ட் எலிசபத்தை அடிப்படையாகக் கொண்ட அணியாக இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பார்ல் என்ற ஊரை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் பணத்தை வாரி இரைத்திருப்பதாக அதாவது ரூ.250 கோடி வரை செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தென் ஆப்பிரிக்கா பணபல டி20 லீக் அல்லாமல் யுஏஇயில் ஒரு போட்டி டி20 லீக் உருவாகிறது, இதனால் கிரிக்கெட் உலகம் பண முதலாளிகளால் இரண்டாகப் பிரிந்து கிடக்கப் போகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, IPL, Lucknow Super Giants, Mumbai Indians, Rajasthan Royals, South Africa, SRH, T20