Home /News /sports /

வைடு தராத அம்பயருக்கு ஒரு பாட்டில் பீர் பார்சல் - ஹேசில்வுட் குஷி

வைடு தராத அம்பயருக்கு ஒரு பாட்டில் பீர் பார்சல் - ஹேசில்வுட் குஷி

ஜோஷ் ஹேசில்வுட்

ஜோஷ் ஹேசில்வுட்

செவ்வாயன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் விக்கெட்டுக்கு வழிவகுத்ததாலும் தன்னுடைய வைட் பந்து நடுவரால் வைட் என்று அழைக்கப்படாததும் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
    செவ்வாயன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் விக்கெட்டுக்கு வழிவகுத்ததாலும் தன்னுடைய வைட் பந்து நடுவரால் வைட் என்று அழைக்கப்படாததும் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கூறினார்.

    182 ரன்களைத் துரத்திய ஸ்டோய்னிஸ், 19வது ஓவரின் இரண்டாவது பந்தில் அவுட்டானார். இதற்கு முன்பு ஹேசில்வுட் வீசிய பந்திற்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே கொஞ்சம் அதிகமாகவே ஷஃபுள் செய்தார் ஸ்டாய்னிஸ். இதனால்தான் ஹேசில்வுட்டின் முந்தைய பந்து பிட்சுக்கு வெளியே கிட்டத்தட்ட பிட்ச் செய்யப்பட்டது.

    ஸ்டாய்னிஸ் மிகவும் நகர்ந்து சென்று ஆட முயற்சி செய்த போது ஹேசில்வுட் வைடு லைனுக்கு அப்பால் வீசினார், ஆனால் நடுவர், அதை வைட் என்று அழைப்பதற்குப் பதிலாக, பந்து வீச்சை சட்டப்பூர்வமாகக் கருதினார், இது ஸ்டாய்னிசுக்கும் லக்னோ அணியினருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை 25 ரன்களுக்கு எடுத்தார். ஹேசில்வுட் ரக பவுலிங்குக்கு சாதகமான நேற்றைய பிட்சில் லக்னோ அணி அவரை விளையாடத் திணறி தோற்றது.

    இந்நிலையில் ஹேசில்வுட் கூறியதாவது:

    அந்த பந்தை வைடு இல்லை என்று நடுவர் கூறியவுடன் விரைவில் என் பந்து வீச்சுக்காக என் தொடக்க நிலைக்குத் திரும்பினேன். நிச்சயம் வைடு இல்லை என்றது என் அதிர்ஷ்டமே இதற்காக நடுவருக்கு ஒரு பீர் நிச்சயம் உண்டு என்றார் ஹேசில்வுட்

    RCB அணித்தலைவர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 96 ரன்களுடன் தனது பங்கை சிறப்பாக விளையாடினார், ஆரம்ப தடுமாற்றங்களுக்குப்பிறகு ஆர்சிபி ஸ்கோரை 6 விக்கெட்டுக்கு 181 ரன்களுக்கு உயர்த்தினார்.

    37 வயதான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் சோர்வாக இருந்தார், ஆனால் இன்னிங்ஸின் இறுதி வரை தொடர்ந்தார். அவர் கூறும்போது,

    "எனக்கு சில 96 மற்றும் 97 ரன்கள் கிடைத்தது, எனவே நிச்சயம் சதம் ஒன்று உண்டு என்றே நம்புகிறேன். இன்னிங்ஸை நிலைப்படுத்தவும், பின் இறுதியில் அடித்து ஆடவும் எங்களுக்கு ஒருவர் தேவைப்பட்டார். இன்று, நான் அதை செய்ய முடிந்ததற்கு நன்றி. இப்படித்தான் ஆட வேண்டும் என்று என் மனதில் முன் கூட்டியே சித்திரம் தீட்டி வைத்திருப்பேன் அந்த வரைபடத்தை என்னால் பின்பற்ற முடிகிறது என்பது முக்கியம்” என்றார் டுபிளெசிஸ்.

    தோல்விக் கேப்டன் ராகுல் கூறும்போது, நன்றாகத் தொடங்கினோம், 7/2 என்ற நிலையிலிருந்து கோட்டை விட்டோம். இந்தப் பிட்சில் 180 ரன்கள் என்பது 15-20 ரன்கள் அதிகமே என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, RCB

    அடுத்த செய்தி