• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நடராஜனுக்கு கொரோனா உறுதியான நிலையில் பிசிசிஐ சீண்டிய மைக்கேல் வாகன்

நடராஜனுக்கு கொரோனா உறுதியான நிலையில் பிசிசிஐ சீண்டிய மைக்கேல் வாகன்

மைக்கேல் வாகன்

மைக்கேல் வாகன்

IPL 2021 | Michael Vaughan | சன்ரைசர்ஸ் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    சன்ரைசர்ஸ் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் இன்றைய போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 தொடர் பாதியிலே நிறுத்தப்பட்டது. கடந்த 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 2-வது பாதி தொடங்கியது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று டெல்லி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

    பிசிசிஐ-ன் விதிமுறைகளின் படி ஒவ்வொரு போட்டிக்கு முன்னும், பின்னும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி இன்று காலை சன்ரைசர்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சன்ரைசர்ஸ் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளளனர்.

    Also Read : பஞ்சாப்பை வீழ்த்திய ராஜஸ்தானுக்கு மகிழ்ச்சி... ஆனால் சஞ்சு சாம்சனுக்கு சோகம்

    இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் இன்றைய போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பிசிசிஐ விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.



    அதில், ஐபிஎல் தொடர் கடைசி டெஸட் (இந்தியா vs இங்கிலாந்து, மான்செஸ்டர் டெஸ்ட்) போல ரத்து செய்யப்படுமா என்று பார்ப்போம். ஆனால் அது நடக்காது என்று உறுதியளிக்கிறேன் என்றுள்ளார். இங்கிலாந்து கடைசி டெஸ்டின் போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: