• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இவர்தான் மிகச்சிறந்த டி20 பிளேயர் - சிஎஸ்கே வீரரை புகழ்ந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

இவர்தான் மிகச்சிறந்த டி20 பிளேயர் - சிஎஸ்கே வீரரை புகழ்ந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

Ravindra Jadeja

Ravindra Jadeja

விக்கெட்கள் சீக்கிரமாகவே விழுந்துவிட்டது, அந்த நேரத்தில் நங்கூரமிட்டு ரன்களை திரட்ட வேண்டுமென்றாலும் அதற்கு சிறந்தவர் ஜடேஜா தான்.

  • Share this:
சிஎஸ்கே வீரர் ஒருவரை இவர் தான் மிகச்சிறந்த டி20 வீரர் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச் சீட்டாக விளங்கும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ‘மிகச்சிறந்த டி20 பிளேயர்’ என புகழ்ந்துள்ளார். சமீபத்திய போட்டிகளில் ஜடேஜா மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார். 32 வயதாகும் ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி சிஎஸ்கே அணியை பிளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காக இருந்திருக்கிறார்.

‘கிரிக்பஃஸ்’ தளத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அளித்துள்ள பேட்டியில், “நான் ரவீந்திர ஜடேஜாவை எந்த அளவுக்கு தரத்தில் உயர்த்தி வைத்திருக்கிறேன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும். நீங்கள் ஒரு டி20 பிளேயரை உருவாக்கி வருகிறீர்கள், அதிலும் ஒரு பேட்ஸ்மேனை உருவாக்கி வருகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அப்போது நீங்கள் கிறிஸ் கெயிலின் பவரையும், விராட் கோலியின் ஆட்டத்திறனையும் ஒருங்கிணைக்க வேண்டும், அப்படி செய்தால் அந்த வீரரால் எந்த பந்தையும் திறம்பட அடித்து விளையாட முடியும்.

Also Read: பாகிஸ்தான் அணிக்கு நான் கோச்சிங் கொடுக்காதததுக்கு காரணம் இது தான் – ரகசியத்தை வெளியிட்ட அக்ரம் 

ஒரு டி20 பந்து வீச்சாளரை உருவாக்குகையிலும் இதே போலத்தான். ஆனால் நீங்கள் ஒரு டி20 பிளேயரை உருவாக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவைப் போல தான் ஒருவரை உருவாக்க வேண்டும். ஏனென்றால் அவரிடம் அனைத்துமே இருக்கிறது.

ஜடேஜா ஒரு ஒரு நம்பமுடியாத ஃபீல்டர். அவரால் சிறந்த முறையில் இடக்கை சுழற்பந்துவீச்சை வீச முடிகிறது. பிட்ச் கொஞ்சம் சுழற்பந்துவீச்சுக்குரிய தன்மை கொண்டிருந்தாலும், பிற வழக்கமான பந்துவீச்சாளர்களுக்குரிய அம்சம் ஜடேவிடம் இருக்கிறது. அதே போல விக்கெட்கள் சீக்கிரமாகவே விழுந்துவிட்டது, அந்த நேரத்தில் நங்கூரமிட்டு ரன்களை திரட்ட வேண்டுமென்றாலும் அதற்கு சிறந்தவர் ஜடேஜா தான். 15 பந்துகள் தான் மீதம் இருக்கிறது என்ற நிலையில் அவர் களத்துக்கு வந்தாலும் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவார். ஜடேஜா தான் சிறந்த டி20 பிளேயர்” இவ்வாறு மைக்கேல் வாகன் பேசினார்.

Also Read:  அறுவை சிகிச்சையின்போது அழுதது ஒரு குற்றமா? – அதுக்கும் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை

ஐபிஎல் 2020 தொடரில் 20வது ஓவரில் ரன்கள் குவித்த வீரர்களை பொறுத்தவரையில், ரவீந்திர ஜடேஜா 19 பந்துகளை சந்தித்து 64 ரன்களை திரட்டியிருக்கிறார். இதில் 7 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் சராசரி 336க்கும் அதிகம் என்பது வியப்புக்குரியதாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: