ஐபிஎல் ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு கிடைத்த தொகை ரொம்பவும் குறைவு: மைக்கேல் கிளார்க் அதிருப்தி

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர். ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் அணி கழற்றிவிட்டதால் அவர் ஐபிஎல் ஏல பட்டியலில் பட்டியலிடப்பட்டு பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.

  • Share this:
ஆஸ்திரேலிய விரர் ஸ்டீவ் ஸ்மித் 2.2 கோடி ரூபாய் என்ற மிகவும் குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தொடர்பான Big Sports Breakfast என்ற நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் கிளார்க் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலம் தொடர்பாக பேசியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர். ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் அணி கழற்றிவிட்டதால் அவர் ஐபிஎல் ஏல பட்டியலில் பட்டியலிடப்பட்டு பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.

இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் குறித்து பேசிய கிளார்க் கூறுகையில், அவர் (ஸ்டீவ் ஸ்மித்) உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இல்லையென்றால், அவர் வெகு தொலைவில் இல்லை. விராட் கோலி முதலிடத்தில் உள்ளார், ஆனால் ஸ்மித் முதல் மூன்று இடங்களில் உள்ளார்.

அவருடைய டி20 ஆட்டத்திறன் கடந்த ஐபில் சீசனில் அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்பதை அறிவேன். இருப்பினும் மிகவும் குறைந்த விலைக்கு (4 லட்சம் டாலருக்கு கீழ்) அவர் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்.

அவர் கடந்த சீசனில் எவ்வளவு தொகை வாங்கினார், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துள்ளார், இதையெல்லாம் பார்க்கையில், ஐபிஎல் தொடருக்காக இந்தியாவுக்கு விமானத்தில் புறப்படும் முன்னர் ஸ்டீவ் ஸ்மித் தன்னை காயப்படுத்திக் கொண்டு இங்கேயே இருந்து விடுவார் என தோன்றுகிறது.

இந்த சொற்ப பணத்திற்காக மனைவி, குடும்பத்தினரை 11 வாரங்கள் பிரிந்து இந்தியாவுக்கு சென்று விளையாடுவார் என்று தோன்றவில்லை.

அதே நேரத்தில் பணத்தை பற்றி கவலைப்படாமல் தன்னை குறைத்து மதிப்பிட்டதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இந்தியாவுக்கு வந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்று தன்னை நிரூபித்து காட்டுவாரா என்பதையும் பார்க்க ஆவலாய் இருப்பதாக” கிளார்க் தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published: