• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பழைய ஃபார்முக்கு வந்த ஹர்திக்: இரண்டாவது சுற்றில் முதல் வெற்றியைப் பெற்ற மும்பை அணி

பழைய ஃபார்முக்கு வந்த ஹர்திக்: இரண்டாவது சுற்றில் முதல் வெற்றியைப் பெற்ற மும்பை அணி

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 42-வது போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும் மந்தீப்பும் களமிறங்கினர். மந்தீப் 15 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கெய்ல் 1 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

    அதைத் தொடர்ந்து, 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மார்க்ரம் மட்டும் நிதானமாக ஆடி 42 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. 136 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் குயின்டன் டிகாக்கும் களமிறங்கினர்.

    ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். டிகாக்கும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் திவாரி நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தார். அவரும் 45 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஹர்திக் பாண்டியா, கைரன் பொல்லார்ட் இணை ஜோடி சேர்ந்தது. பார்ம் அவுட்டிலிருந்து ஹர்திக் இந்தப் போட்டியில் அவரது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    30 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ்ர்களுடன் 40 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுபுறம் பொல்லார்ட் 15 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது சுற்றில் தொடர் தோல்விகளைச் சந்தித்து மும்பை அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: