Home /News /sports /

IPL 2022 CSK - MI Jadeja- வணக்கம் தல நீங்க இல்லாட்டி.. - தோனியை வணங்கிய கேப்டன் ஜடேஜா

IPL 2022 CSK - MI Jadeja- வணக்கம் தல நீங்க இல்லாட்டி.. - தோனியை வணங்கிய கேப்டன் ஜடேஜா

ஜடேஜா-தோனி

ஜடேஜா-தோனி

அரசியல் கலாச்சாரத்தில் இருக்கும் அனைத்தும் கிரிக்கெட்டையும் பீடித்து விட்டது, அன்று ஜாண்ட்டி ரோட்ஸ், சச்சின் டெண்டுல்கர் காலில் விழுந்தார், நேற்று தோனி தன் பினிஷிங் கடமையைச் செய்ததற்கு, அதுவும் சிஎஸ்கேவின் கேப்டன் ஜடேஜா தோனியை களத்தில் இறங்கி வணங்குகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது

மேலும் படிக்கவும் ...
    அரசியல் கலாச்சாரத்தில் இருக்கும் அனைத்தும் கிரிக்கெட்டையும் பீடித்து விட்டது, அன்று ஜாண்ட்டி ரோட்ஸ், சச்சின் டெண்டுல்கர் காலில் விழுந்தார், நேற்று தோனி தன் பினிஷிங் கடமையைச் செய்ததற்கு, அதுவும் சிஎஸ்கேவின் கேப்டன் ஜடேஜா தோனியை களத்தில் இறங்கி வணங்குகிறார்.

    கேப்டன்சி வந்தது முதல் ஜடேஜாவின் பீல்டிங்கும் சொதப்ப ஆரம்பித்தது, நேற்று 2 கேட்ச்களை விட்டார், தோனி ஒரு ஸ்டம்பிங்கை விட்டார், தோனி பினிஷிங் என்று பெரிதாகப் பேசப்படும் இந்தப் போட்டி கிரிக்கெட்டின் மோசமான தரத்தில் இருந்தது. இரு அணிகளும் மோசமான பீல்டிங், மோசமான பேட்டிங், மோசமான கேப்டன்சிக்கான போட்டியாகவே இருந்தது, ஆனால் தோனி பினிஷிங் இந்த அலங்கோலங்களை மூடி மறைத்து விட்டது. ரசிகர்கள் கண்களிலிருந்து மறைத்து விட்டது.

    ஜடேஜா தல தோனியை வணங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.



    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 42 ரன்கள் தேவைப்பட்டது, அப்போது 'தோனி கால்குலேட்டர்' கணக்குப்போடத் தொடங்கியது. சிஎஸ்கே சமன்பாட்டை 2 ஓவர்களில் 28 ஆகக் குறைத்தது, அதைத் தொடர்ந்து தோனி தனது பேட்டிங் பார்ட்னர் டுவைன் பிரிட்டோரியஸை ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக கொஞ்சம் உத்வேகப்படுத்தினார். 19வது ஓவரில் 11 ரன்கள் வந்தது, கடைசி 6 பந்துகளில் CSKக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் முதல் பந்திலேயே ப்ரிட்டோரியஸை அவுட் செய்த போது சிஎஸ்கே தோல்வி அடைந்து விடும் என்றே பலரும் நினைத்தனர், ஆனால் பிராவோ வந்து சிங்கிள் எடுத்துக் கொடுக்க . தோனி பினிஷ் செய்ய 4 பந்து 16 ரன் தேவையாக இருந்தது. கடைசியில் தோனி தன் பழைய பார்முக்கு வந்து, 6, 4, 2, 4 - என விளாச CSK 156 ரன்களைத் துரத்தி 2 முக்கிய புள்ளிகளைச் சேகரித்ததை உறுதிசெய்தார் தோனி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dhoni, IPL 2022, Ravindra jadeja

    அடுத்த செய்தி