மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழக்கிழமை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டக் அவுட் ஆன பிறகு தேவையற்ற சாதனையைப் படைத்தார். இந்த டக் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் செய்துள்ளார்.
ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று ஒரு படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக் கூறுவது போல் ஆகிவிட்டார் ரோஹித் சர்மா.
CSK இன் முகேஷ் சவுத்ரி தனது இரண்டாவது பந்திலேயே MI கேப்டனை வெளியேற்றியதால், ரோஹித் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். ரோஹித் மிட்-ஆனில் மிட்செல் சான்ட்னரிடம் ஒரு எளிய கேட்ச் கொடுத்து தனது அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுக்கத் தவறினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 14 முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்த ரோஹித், பியூஷ் சாவ்லாவை முறியடித்து இந்த தேவையற்ற சாதனையை பதிவு செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் சாவ்லா 13 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அடித்த வீரர்கள்:
ரோஹித் சர்மா - 14
பியூஷ் சாவ்லா - 13
ஹர்பஜன் சிங் -13
முன்னதாக, எதிர்மறைச் சாதனையை லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவும், அதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் வைத்திருந்தனர். மந்தீப் சிங் மற்றும் பார்த்தீவ் படேல் ஆகியோர் பட்டியலில் உள்ள மற்ற பேட்டர்கள். சுவாரஸ்யமாக, இந்தப் பட்டியலில் உள்ள முதல் ஐந்து வீரர்களும் தங்கள் பெயருக்கு 13 டக் சாதனையைக் கொண்டிருந்தனர். CSK க்கு எதிராக ஒரு டக் மூலம், ரோஹித் முன்னிலை பெற்று தேவையற்ற ஐபிஎல் சாதனையைப் பெற்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.