மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரானஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. CSK அணியின் பினிஷர் தல MS தோனி 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து தனது இறுதித் திறமையை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் ஐபிஎல் 2016 இல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக (ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் போது) ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற, கடைசி 4 பந்தில் 16 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது சொந்த சாதனையை தோனி சமன் செய்தார்.
ஐபிஎல் 2022ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் ஜோடியான ராகுல் திவேத்தியா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் ஐபிஎல் சாதனை படைத்துள்ளனர் - கடைசி 4 பந்துகளில் 17 ரன்கள் - ஐபிஎல் 2012 இல் புனே வாரியர்ஸுக்கு எதிராக ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் சவுரப் திவாரியும் 4 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தனர்.
சக வீரரும் சிஎஸ்கே ஆல்ரவுண்டருமான டுவைன் பிரிட்டோரியஸ் தோனியின் மற்றொரு பினிஷிங்குக்குப் பிறகு தோனியை ஃபினிஷராகப் புகழ்ந்து பாடினார். “நம்பமுடியாத வகையில் கேம்களை முடிப்பதில் அவர் தலைசிறந்தவர், இன்றிரவு அதை மீண்டும் செய்தார். (ஜஸ்பிரித்) பும்ராவுக்கு எதிரான முதல் ஓவரிலேயே அந்த ஸ்கூப் ஷாட்டுக்கு நான் செல்ல விரும்பினேன், ஆனால் தோனி 'காத்திருங்கள், காத்திருங்கள், காத்திருங்கள்' என்றார். நான் காத்திருந்து அடுத்த ஓவரில், 'இப்போது நான் அடிக்கிறேன்' என்றேன். அப்போது பச்சைக்கொடி காட்டினார். . எங்களுக்கு ஐந்து பவுண்டரிகள் தேவை என்று எங்களுக்குத் தெரியும் என்று பிரிட்டோரியஸ் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் உண்மையான பிரச்சனை நேற்று இஷான் கிஷன், ரோஹித் சர்மா இருவரும் டக் அவுட் ஆனதே. இல்லையெனில் ஸ்கோர் 160 ஆக இருந்தால் கூட தோனியினால் பினிஷ் செய்திருக்க முடியாது. 180 ரன்கள் என்றால் தோனி விரட்டலையே கைவிட்டு விட்டு ரன் ரேட்டுக்காக ஆடக்கூடியவர்தான், அட்வென்ச்சரெல்லாம் தோனி செய்ய மாட்டார். ஜெயிக்கக் கூடியதை கடைசி ஓவர் வரை இழுத்து ஜெயிப்பார், நேற்றும் அப்படி ஒரு நாளே.
ஜெய்தேவ் உனாட்கட் வரலாறு தெரிந்தும் அவரிடம் கடைசி ஓவரைக் கொடுக்கலாமா? 127 கிமீ வேகத்தில் சொத்தையாக வந்து போட்டுக்கொடுக்கிறார். இல்லையெனில் ஸ்ட்ரோக் ரேஞ்ச் இல்லாத தோனியினால் பினிஷ் செய்ய முடிந்திருக்காது. அவர் அடிக்கக் கூடிய லெந்தில் வாகாக வீசினார் உனாட்கட்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.