கிரிக்கெட் விதிமுறைகளுக்கான ஒரே அத்தாரிட்டியான எம்.சி.சி. கிளப், பேட்டர் என்று அழைக்கப்படுவன் மூலம் பாலின நடுவு நிலைமையை கொண்டு வருகிறோம் என்றும் கிரிக்கெட் அனைவரையும் உள்ளடக்கிய (இன்க்ளூசிவ்) ஒரு விளையாட்டு என்பதை மறு நிர்மாணம் செய்யவும் உதவும் என்கிறது எம்சிசி. எனவே இனி வரணனை முதல் ஊடக பிரயோகம் மற்றும் அதிகாரப் பூர்வ பிரயோகங்களில் பேட்ஸ்மேன் போய் பேட்டர் அமலுக்கு வருகிறது.
ஜெண்டில்மேன்களின் கேம் கிரிக்கெட் என்று கூறப்படுவது இப்போது ஜெண்டில்வுமன் கேம் ஆகவும் மாறியுள்ளதால் எனவே பாலின வேறுபாட்டை அதை வர்ணிக்கும் சொற்பொருள் அளவிலேயே மாற்றத்தை கொண்டு வர வேண்டியுள்ளது. ஆகவே பொதுவான பேட்டர், பவுலர் போன்ற சொற்களை பயன்படுத்துவதுதான் அரசியல் ரீதியாக சரியானது என்கிறது எம்.சி.சி.
இது தொடர்பாக எம்சிசி வெளியிட்ட அறிக்கையில், “பாலின சமநிலை சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிரிக்கெட்டில் அனைவரையும் உள்ளடக்கிய நிலை எட்டப்பெறும். இதனையடுத்து பேட்ஸ்மேன் என்பதற்குப் பதிலாக பேட்டர் என்ற வார்த்தையை இனி பயன்படுத்துவோம். பவுலர்கள், பீல்டர்கள் பொதுவான சொற்களாக உள்ளன, ஆனால் பேட்ஸ்மேன் என்பதில் மேன் என்பது ஆண்களைக் குறிப்பதாக உள்ளது எனவே இந்த மாற்றம் உடனே அமலுக்கு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டும் பெரிய அளவில் முன்னேறி வருகிறது, ரசிகர்கள் கவனம் அந்த கிரிக்கெட்டின் மீதும் அதிகம் இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் மெல்போர்னில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதியை சுமார் 86,174 பேர் பார்த்துள்ளனர். 2017 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியையும் கணிசமான ரசிகர்கள் கண்டு களித்தனர். இந்நிலையில் பேட்டர் மாற்றத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.
Also Read: DC vs SRH | ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி
ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Gender equality, News On Instagram