முட்டாள்கள்... மேக்ஸ்வெல்லுக்கு டெக்ஸ்ட் செய்த கோலி.. காரணம் என்ன?

முட்டாள்கள்... மேக்ஸ்வெல்லுக்கு டெக்ஸ்ட் செய்த கோலி..  காரணம் என்ன?

விராட் கோலி

மேக்ஸ்வெல் ஐபிஎல்-க்கு பிக்னிக் வருவதுபோல் வந்துபோகிறார் என சேவாக் சாடியிருந்தார்.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த சீசனில் களமிறங்கியுள்ளார். கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் பெரிதாக ஜொலிக்கவில்லை . அதேவேளையில் ஆஸ்திரேலியா அணிக்காக ஒருநாள் டி-20 தொடரில் ஒரு காட்டு காட்டினார். மேக்ஸ்வெல் ஐபிஎல்-க்கு பிக்னிக் வருவதுபோல் வந்துபோகிறார் என சேவாக் சாடியிருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியா டூரின் போதே தன்னை அணியில் இணைத்து கொள்ள கோலி விருப்பம் தெரிவித்ததாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய மேக்ஸ்வெல், விராட்கோலியும், நானும் எப்போதாவது மெசேஜ் செய்வோம். இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்த பின்னர் கோலி என்னிடம் பேசினார். அந்த உரையாடலின் போது ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவது குறித்து என்னிடம் பேசினார். ஆர்.சி.பி அணியில் உங்களை சேர்க்க விரும்புகிறோம் என்றார். இருந்தாலும் ஏலம் இருக்கிறது. நீங்கள் அணியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்’ இப்போது நல்லபடியாக ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ஐபிஎல் ஆக்‌ஷன் நடந்தபோது மேக்ஸ்வெல் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்துள்ளார். அவருடன் ஆடம் சாம்பா இருந்துள்ளார். ஆர்.பி.சி அணிக்காக ஏலம் எடுத்த தகவல் மேக்ஸ்வெல்லுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடம் சாம்பா ஏற்கெனவே ஆர்.சி.பி அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். தன்னிடம் இருந்த ஆர்.சி.பி தொப்பியை எடுத்து மேக்ஸ்வெல்லுக்கு அணிவித்துள்ளார். அதோடு நிற்காமல் அதனை புகைப்படமாக எடுத்து நான் தான் முதலில் மேக்ஸ்வெல்லை ஆர்.சி.பிக்காக வரவேற்றுள்ளேன் என கோலிக்கு டெக்ஸ்ட் பண்ணியுள்ளார். இதற்கு ரிப்ளே அளித்த கோலி முட்டாள்கள்.. இருந்தாலும் இந்த வழி நன்றாகத்தான் இருக்கிறது” எனக் கமெண்ட் செய்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published: