நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தனர். விராட் கோலி, படிக்கல் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் தேவ்தத் படிக்கல் 11 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய அகமது 14 ரன்களி அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கினார். கோலி- மேக்ஸ்வெல் இணை ரன்ரேட்டை உயர்த்தியது. மேக்ஸ்வெல் பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை கொடுத்தார். 13வது ஓவரில் ஹோல்டர் பந்துவீச்சில் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கோலி 33 ரன்கள் எடுத்த நிலைய்ல் வெளியேறினார்.
அப்போது ஆர்.சி.பி 3 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் என நல்ல நிலையில் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த கிறிஸ்டியன் ஒரு ரன்களில் வெளியேறி ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மேக்ஸ்வெல் தனியாளாக போராடி வந்தார். இந்த ஐபிஎல் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 20 ஓவர் முடிவில் ஆர்.சி.பி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.