Home /News /sports /

கோலியை ஓய்வெடு என்கிறீர்களே சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் இதை கூறுவீர்களா?- பத்த வச்சுட்டயே பரட்டை

கோலியை ஓய்வெடு என்கிறீர்களே சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் இதை கூறுவீர்களா?- பத்த வச்சுட்டயே பரட்டை

ரவி சாஸ்திரி- ஹெய்டன்

ரவி சாஸ்திரி- ஹெய்டன்

ஐபிஎல் 2022 மட்டுமல்ல 3 ஆண்டுகளாகவே தன் ஃபார்முக்குக்காக போராடி வரும் விராட் கோலிக்குத் தேவை ஓய்வு என்று ரவி சாஸ்திரி கூற ஏன் ரோஹித் சர்மாவும் தான் ஃபார்மில் இல்லை அவரிடம் இப்படி கூறுவாரா ரவி சாஸ்திரி என்று பத்த வைக்கிறார் ஹெய்டன்.

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் 2022 மட்டுமல்ல 3 ஆண்டுகளாகவே தன் ஃபார்முக்குக்காக போராடி வரும் விராட் கோலிக்குத் தேவை ஓய்வு என்று ரவி சாஸ்திரி கூற ஏன் ரோஹித் சர்மாவும் தான் ஃபார்மில் இல்லை அவரிடம் இப்படி கூறுவாரா ரவி சாஸ்திரி என்று பத்த வைக்கிறார் ஹெய்டன்.

    டி 20 உலகக் கோப்பை இந்த ஆண்டு ஆடப்பட இருப்பதால், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் தலைகளான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஃபார்ம் பற்றி கவலைப்படுகிறார்கள். இந்திய அணியின் பெரிய நன்மைக்காக, முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலியை கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க பரிந்துரைத்தார்.

    இந்நிலையில் இது குறித்து கேள்வி எழுப்புகையில் மேத்யூ ஹெய்டன் கூறும்போது, “இதே அறிவுரையை ரோஹித் சர்மாவுக்கு வழங்குவாரா ரவி சாஸ்திரி? இவர்கள் எப்போதும் கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். உலகக்கோப்பை, ஐபிஎல் எல்லாமே சீக்கிரம் வந்து விடுகிறது. எனவே அவர்கள் மனத்தளவில் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்த விஷயத்தில் கோலி பல ஆண்டுகளாக பிரில்லியண்ட் ஆக இருக்கிறார். மிகவும் துடிப்புடனும் பற்றுதலுடனும் இருக்கிறார். எனவே சில ஆட்டங்களில் ரன் எடுக்க முடியவில்லை என்றால் உடனே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதற்குத் தைரியமும் வேண்டும், எந்த வீரரும் செலக்டரிடம் போய் ‘சாரி, என்னால் ஆட முடியாது’என்று கூற முடியுமா?

    ஏனெனில் அவர் ஆட விரும்புகிறார், இன்னிங்ஸை கட்டுப்படுத்தும் ஒரு வீரராக அவர் இருக்கிறார். சில வேளைகளில் ரன் வராமல் அவுட் ஆவது நடக்கவே செய்யும் அதிலிருந்து வெளியேறும் வழி தெரியாமல் இருக்கும். சில வேளைகளில் அவுட் ஆஃப் பார்மிலிருந்து வெளியே வர ஒரு கவர் ட்ரைவ், ஒரு புல் ஷாட் அல்லது விராட் கோலிக்கு வேகமாக ஓடி எடுக்கும் ஒரு ரன் அல்லது 2 ரன் அல்லது டேவிட் வார்னர் ரக பாடிலேங்குவேஜ் அவ்வளவுதான் பார்ம் மீண்டும் வரும், ஓய்வெல்லாம் தேவையில்லை, என்கிறார் மேத்யூ ஹெய்டன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Ravi Shastri, Rohit sharma, Virat Kohli

    அடுத்த செய்தி