• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • லக்னோ, அகமதாபாத் பெயரில் ஐ.பி.எல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள்

லக்னோ, அகமதாபாத் பெயரில் ஐ.பி.எல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள்

ஐ.பி.எல்

ஐ.பி.எல்

ஐ.பி.எல் தொடரில் லக்னோ, அகமதாபாத் பெயரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • Share this:
    பி.சி.சி.ஐயால் ஐ.பி.எல் என்று அழைக்கப்படும் இந்தியன் பிரிமியர் லீக் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 8 அணிகளுடன் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் தொடருக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச போட்டிகளில் இணைந்து விளையாடும் இந்திய வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் எதிரெதிர் அணி வீரர்களாக விளையாடுவதும், சர்வதேசப் போட்டிகளில் எதிரணியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் சக வீரர்களாக விளையாடும் இந்தத் தொடரின் சிறப்பு. மேலும், ஐ.பி.எல் தொடரின் மூலம் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்து அங்கீகாரம் கிடைத்துவருகிறது.

    இதுவரையில், 14 ஐ.பி.எல் தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்தநிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள 15-வது ஐ.பி.எல் தொடரில் புதிதாக இரண்டு அணிகளைச் சேர்க்க ஐ.பி.எல் முடிவு செய்தது. அதன்படி, இந்நிலையில், ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது. அதன்படி, அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இதில், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் லக்னோ அணியை சுமார் ரூ.7000 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. தனியார் ஈக்விட்டி நிறுவனமான சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம், அகமதாபாத் அணியை ரூ.5200 கோடிக்கு வாங்கி உள்ளது. இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: