மாஸ்டர் லுக்கில் மாஸ் காட்டும் ரெய்னா..!- ட்ரெண்டிங் புகைப்படம்

மாஸ்டர் லுக்கில் மாஸ் காட்டும் ரெய்னா..!- ட்ரெண்டிங் புகைப்படம்

ரெய்னா, விஜய்

சைக்கிள் மேட்டர்ல காலையில இருந்து விஜய் ட்ரெண்டிங்ல இருக்க. சத்தமே இல்லாம நம்ம சின்ன தல ரெய்னா இப்போ ஸ்கோர் பண்ணிட்டு இருக்காரு.

  • Share this:
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. சிஎஸ்கே பேன்ஸ் செம உற்சாகத்துல இருக்காங்க. தல தோனி, சின்ன தல ரெய்னா எல்லாம் இப்பவே பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தமிழகத்துல இப்போ தேர்தல் திருவிழா நடந்துக்கிட்டு இருக்கு. சினிமா பிரபலங்கள் எல்லாம் வழக்கமா ஓட்டு போட்டு விரலில் வைக்கப்பட்ட மையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு போவங்க. ஆனா காலையிலயே சைக்கிள்ல வந்து ட்ரெண்டிங் ஆயிட்டு போய்ட்டாரு விஜய்.

டாப் டக்கரு சார்பு லுக்கரு.. ஸ்டண்டநக்கரு ஸ்பார்க்கு பிலிக்கரு...சர்கார் படத்துல வர்ற அந்த பேக்ரவுண்ட் பாட்டு மட்டும்தான் மிஸ்ஸிங். மத்தபடி மாஸ்க் போட்டுகிட்டு வந்த விஜய் மொத்தமா மாஸ் காட்டிட்டு போய்டாரு. மாஸ்டர் படத்துல விஜய் செம ஹேண்ட்ஸம் லுக்குல இருப்பாரு. ‘அந்த கண்ண பாத்தாக்கா லவ்வு தானா தோனாதா’வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் எல்லாம் அள்ளுனது.

 சைக்கிள் மேட்டர்ல காலையில இருந்து விஜய் ட்ரெண்டிங்ல இருக்க. சத்தமே இல்லாம நம்ம சின்ன தல ரெய்னா இப்போ ஸ்கோர் பண்ணிட்டு இருக்காரு. மாஸ்டர் பட விஜய் லுக்கில் ரெய்னா சில போட்டோக்களை இன்ஸ்டாவிலும், ட்விட்டரிலும் அப்லோடு பண்ணி லைக்ஸ் களை தெறிக்கவிட்டுக்கிட்டு இருக்கார்.
மனுசன் சும்மா போட்டிருந்தா பரவாயில்ல ’மாஸ்டர்’படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாட்டின் “லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேய்ஸ் பி ஹாப்பி” லைனை போட்டு விஜய்யின் மாஸ்டர் லுக்கில் ரெய்னா மாஸ் காட்டுகிறார். அந்த கண்ண பாத்தாக்கா லவ்வு தானா தோனாதா ரெய்னா...
Published by:Ramprasath H
First published: