Home /News /sports /

IPL 2022 Points Table- 10 புள்ளிகளுடன் 4 அணிகள்- சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

IPL 2022 Points Table- 10 புள்ளிகளுடன் 4 அணிகள்- சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

சிஎஸ்கே

சிஎஸ்கே

10 புள்ளிகளைப் பெற்றுள்ள 4 அணிகளில் 3 அணிகளுக்கு இன்னும் தலா 3 போட்டிகள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபிக்கு இன்னும் தலா 3 மற்றும் 2 போட்டிகள் உள்ளன. ஆகவே சிஎஸ்கே மிக மிகக்கடினம்

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளதோடு பிளே ஆஃப் வாய்ப்பு கடினமென்றாலும் இன்னும் தக்க வைத்துள்ளது. நேற்று கொல்கத்தா அணி MI-ஐ 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    கொல்கத்தா 12 போட்டிகளில் 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் கொல்கத்தா உள்ளது. அதே போல் பிற 3 அணிகளான டெல்லி கேபிடல்ஸ் (5வது), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (6வது), பஞ்சாப் கிங்ஸ் (8வது) அணிகளும் 10 புள்ளிகளில் உள்ளன.

    குஜராத் டைட்டன்ஸை விட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இரு அணிகளும் தலா 16 புள்ளிகள் பெற்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது. இதில் சிஎஸ்கே அணி 8 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது நேற்று முதல் முறையாக 8ம் இடத்துக்கு வந்த சிஎஸ்கே இன்று மீண்டும் 9ம் இடத்துக்குச் சரிந்தது.



    10 புள்ளிகளைப் பெற்றுள்ள 4 அணிகளில் 3 அணிகளுக்கு இன்னும் தலா 3 போட்டிகள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபிக்கு இன்னும் தலா 3 மற்றும் 2 போட்டிகள் உள்ளன.

    எனவே என்ன விகார சேகர கணக்கீட்டு போட்டுப் பார்த்தாலும் சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்றுதான் தோன்றுகிறது, ஏனெனில் மீதமுள்ள 3 போட்டிகளில் சிஎஸ்கே வென்று 14 புள்ளிகளில் வந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 போட்டிகளில் ஒன்றில் வென்றால் 16 புள்ளிகள், ஆர்சிபி ஒன்றில் வென்றால் 16 புள்ளிகள், இதெல்லாம் நடக்காமல் இருந்தாலும் 10 புள்ளிகள் பெற்றுள்ள 4 அணிகளில் 3 அணிகளுக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன. கொல்கத்தாவுக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன, இதில் 3 போட்டிகள் உள்ள அணிகளில் ஏதாவது ஒன்று மேலேறி விடும், பிளே ஆஃப் இடங்கள் சீல் ஆகிவிடும். எனவே டெக்னிக்கலாக சிஎஸ்கே இருந்தாலும், நிச்சயம் மிக மிகக் கடினம் ஏறக்குறைய வாய்ப்பில்லை என்றே கூறி விடலாம்.



    என்ன 3 போட்டிகளையும் சிஎஸ்கே வென்றால் 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்வி என்று ஆறுதல் அடையலாம் அவ்வளவே.

    ஆரஞ்சு கேப் பட்லரிடத்தில் தான் உள்ளது. 11 போட்டிகளில் 618 ரன்கள் என்று அவரை யாரும் நெருங்க முடியவில்லை. அடுத்த இடத்தில் ராகுல் 451 ரன்களுடன் இருக்கிறார். அடுத்தடுத்து டுபிளெசிஸ், ஷிகர் தவான், வார்னர் உள்ளனர்.



    பர்ப்பிள் கேப் இடத்தில் செஹல் 22 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார், ஆனால் ஆர்சிபியின் ஹசரங்காவுக்கு இன்னும் தேவை 2 விக்கெட்டுகள்தான் இவரைக் கடந்து செல்ல. ரபாடா, குல்தீப் யாதவ், நடராஜன் அடுத்தடுத்து உள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, IPL 2022, RCB

    அடுத்த செய்தி