இந்தியன் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் தனது சிறப்பான தொடக்கத்தைத் தொடர்ந்தது, இந்த முறை நடப்பு சாம்பியனான
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக மற்றொரு வெற்றியைப் பதிவு செய்தது. டேவிட் மில்லர் சிஎஸ்கே பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்து பெற்ற வெற்றியில் குஜராத் 6 போட்டிகளில் 5-ல் வென்று ஒன்றில் தோற்று 10 புள்ளிகளுடன் +0.395 என்ற ஆரோக்கியமான ரன்ரேட்டிலும் ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் பத்து புள்ளிகளுக்கு முன்னேறியது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 புள்ளிகளை விட இரண்டு புள்ளிகள் அதிகம். நான்கு அணிகளும் தலா 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.
இதற்கு நேர்மாறாக, சிஎஸ்கே அவர்கள் விளையாடிய ஆறு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு மேல் அட்டவணையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
ஆரஞ்சு தொப்பி:
ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் ஜோஸ் பட்லர் தனது 5 இன்னிங்ஸ்களில் 272 ரன்கள் குவித்து முன்னிலையில் உள்ளார்.
புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், பட்லரை விட ஒரு ஆட்டம் அதிகமாக விளையாடி 235 ரன்கள் குவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். 17 பந்துகளில் 19 ரன்களை எடுத்த ஷிவம் துபே, இந்த சீசனில் 226 ரன்களை எடுத்து குஜராத்தின் கேப்டன் பாண்டியாவை விட இரண்டு ரன்கள் குறைவாக எடுத்துள்ளார்.
பர்ப்பிள் கேப் - டாப் பவுலர்
ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் யஜுவேந்திர செஹல் 12 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நடராஜ் நிச்சயம் பர்ப்பிள் தொப்பியை செஹலிடமிருந்து பிடுங்கி தன் வசமாக்குவார். ஏனெனில் யார்க்கர் நடராஜனும் 12 விக்கெட்டுகளுடன் சமநிலையில் இருக்கிறார். செஹல் முதலிடம் நீடிக்க அவரது சிக்கன விகிதமே காரணம்.
மூன்று பந்துவீச்சாளர்கள் தலா 11 ஸ்கால்ப்களை பெற்றுள்ளனர், அதாவது டிசியின் குல்தீப் யாதவ், எல்எஸ்ஜியின் அவேஷ் கான் மற்றும் ஆர்சிபியின் வனிந்து ஹசரங்கா ஆகியோர் உள்ளனர்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.