விளையாட்டு

  • associate partner

சுப்மேன் கில், மோர்கன் சிறப்பான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

சுப்மேன் கில், மோர்கன் சிறப்பான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
சுப்மேன் கில்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 11:22 PM IST
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ ஐந்து ரன்கள் எடுத்திருந்தநிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். வார்னரும் நிதானமான ஆட்டத்தையே மேற்கொண்ட நிலையில், 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களமிறங்கியது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மேன் கில் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். சுனில் நரேன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தநிலையில், கில் நிதானமாக ஆடினார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா நிதானமாக ஆடி 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:

அடுத்த இயான் மோர்கன் களமிறங்கினார். கில், மோர்கன் இணை நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 18 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 145 ரன்களைக் குவித்து வெற்றியை எட்டியது. ஷப்மேன் கில் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும், மோர்கன் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் குவித்தனர்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading